உத்திர பிரதேச மாநில காவல்துறையின் சேவைகள் பிரமிக்க வைப்பதாக ராமர் கோவில் சென்று வந்த தமிழக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அயோத்தி ராமர் கோவில் சென்று தமிழகம் திரும்பிய பிரபல வேத சாஸ்தர நிபுணர் சர்மா சாஸ்திரிகள் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
உத்திர பிரதேச காவல் துறையை பற்றி ஒரு வார்த்தை சொல்லியே ஆக வேண்டும். ஜனவரி 21, 22 ஆகிய இரண்டு நாட்களில் எங்களுக்கு கிடைத்த அனுபவம்.
பல லட்சக்கணக்கான ராம பக்தர்கள் அயோத்யாவில் திரண்டிருந்தனர். அயோத்யா நகரம் எங்கும் மக்களின் வெள்ளம்தான். நாங்களும் அந்த பிராண பிரதிஷ்டை அன்று ஒருவராக அந்த கூட்டத்தில் கலந்திருந்தது எங்கள் புண்ணியம்.
ஆஹா, உத்திர பிரதேச போலிஸ் நடந்துக்கொண்ட விதம் பிரமிக்க வைத்தது. மக்களை அன்புடன் அணுகிய முறை நினைத்து நினைத்து அசைபோட வைத்தது.
பெண்களை ‘மாதாஜி; அல்லது ‘பெஹன்ஜி’ என்று தான் அழைத்து கண்ட்ரோல் செய்தனர். ஆண்களை ‘பய்யா’ என்றோ அல்லது ‘பாபா’ என்றோ அல்லது ‘ஜீ’ என்றோ அழைத்தனர்.
தனிப்பட்ட முறையில் எங்களுக்கு ஏற்பட்ட மேலும் ஒரு அனுபவம். கேளுங்களேன். ஜனவரி 22 மதியம் சென்னை திரும்ப நாங்கள் மந்திர் பகுதியிலிருந்து ஏர்போர்ட் செல்ல வேண்டும். சாலையில் அனைத்து வண்டிகள் தடைசெய்யப் பட்டிருந்தன. தூரம் 11 மைல். செய்வதறியாது தவித்தோம். வேறு வழி இல்லாமல் நடக்க ஆரம்பித்தோம்.
ஒரு கிலோ மீட்டர் சென்றிருப்போம். ஒரு போலீஸ் அதிகாரி எங்களை தடுத்து நிறுத்தி விசாரித்தார். எங்கள நிலமையை புரிந்துக்கொண்டு அவரே ஒரு வண்டி ஏற்பாடு செய்து விமான நிலயம் செல்வதற்கு பெரும் உதவி புரிந்தார்.
இம்மாதிரியான அனுபவம் பலருக்கும் கிடைத்திருக்கும். அது தான் உ.பி. மாநில போலீஸ். யோகி நிர்வாகம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.