சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக அமோகமாக வெற்றி பெற்றது.
சண்டிகரில் மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நேற்று (ஜனவரி 30) நடந்தது. 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில் பாஜகவுக்கு 14 கவுன்சிலர்களும், ஆம்ஆத்மிக்கு 13 கவுன்சிலர்களும், காங்கிரசுக்கு 7 கவுன்சிலர்களும், சிரோன்மணி அகாலி தளத்திற்கு ஒரு கவுன்சிலரும் உள்ளனர்.
மேயர் பதவிக்கு பாஜக மனோஜ் சோங்கரை வேட்பாளராக நிறுத்தியது. ஆம் ஆத்மி கட்சியும் வேட்பாளரை நிறுத்தியது.
மூத்த துணை மேயர் பதவிக்கு, காங்கிரஸின் குர்பிரீத் சிங் காபியை எதிர்த்து பாஜகவின் குல்ஜீத் சந்து போட்டியிட்டார்.
துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பாஜக சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார்.
இந்த நிலையில் தலைமை அதிகாரி அனில்மசிஹ், மேயர் பதவிக்கான வாக்கெடுப்பு பணியை தொடங்கினார்.
சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷனின் முன்னாள் அலுவல் உறுப்பினராக வாக்குரிமை பெற்ற சண்டிகர் எம்.பி கிரோன்கெர் முதலில் வாக்களித்தார். அவர் காலை 11.15 மணிக்கு வாக்களித்தார்.
இந்த மேயர் தேர்தலில் பாஜக மேயர் வேட்பாளர் மனோஜ்சோங்கர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் சிங் 12 வாக்குகள் பெற்றனர். 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
இதில், மேயர் பதவியை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் மனோஜ் சோங்கர் வென்றார். ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் குல்தீப் குமாரை அவர் எளிதில் தோற்கடித்தார்.
பாஜகவின் வெற்றி, ஆம் அக்னி கட்சிக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. தங்களுக்குள்ள ஊடக பலத்தின் காரணமாக பாஜக வெற்றி மீது ஆம் ஆத்மி கட்சி அவதூறு பரப்பி வருகிறது. ஆனாலும் மக்கள் மத்தியில் இது எடுபடுவதாகத் தெரியவில்லை.
மேயர் தேர்தலையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. துணை ராணுவப்படைகளுடன் சுமார் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.