திமுக ஆட்சியின் தொடர்கதை: பழனி முருகன் கோவிலில் பக்தர் மண்டை உடைப்பு!

பழனி முருகன் கோவிலில் ராஜகோபுரம் வழியாக நுழைந்தபோது எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோவில் ஊழியர்கள் தாக்கியதில் பக்தர் ஒருவரின் மண்டை உடைந்தது. இந்த சம்பவம் அங்குள்ள பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பழனியில் தைப்பூச திருவிழா நிறைவடைந்த நிலையிலும் தினமும் பாதயாத்திரையாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

அதே போன்று ஈரோடு மாவட்டம், மற்றும் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த காவடி பக்தர்கள் நேற்று (ஜனவரி 31) வந்தனர். ஈரோட்டிலிருந்து காவடி எடுத்து வந்த பக்தர்கள், ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், எடப்பாடியிலிருந்து காவடி எடுத்து வந்த பக்தர்களும் உள்ளே நுழைய முயன்றனர். இதனால் பக்தர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த கோவில் ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் பக்தர்களுடன் வாக்குவாதம் செய்யவே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் எடப்பாடியை சேர்ந்த பக்தர் சந்திரன் தலையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பக்தரை கோவில் ஊழியர்கள் வெளிப்பிரகாத்திற்கு அழைத்து வந்து தாக்கி காயம் ஏற்படுத்தியதாக கூறி அங்கு திரண்ட பக்தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டி.எஸ்.பி., சுப்பையா தலைமையில் போலீசார் பேச்சு நடத்தியதில் பக்தர்கள் சமாதானம் அடைந்தனர். மேலும் இதில் தொடர்புடைய கோவில் ஊழியர்கள் மன்னிப்பு கேட்டதால் பக்தர்கள் கலைந்து சென்றனர்.

திமுக ஆட்சியில் தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஊழியர்களால் தாக்கப்படுவது அடிக்கடி நடக்கிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

சமீபத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தெலுங்கானாவை சேர்ந்த பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் தாக்கியதில் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. தற்போது மீண்டும் பழனியில் பக்தர் மண்டை உடைக்கப்பட்டிருப்பது திமுக ஆட்சியில் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே உருவாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top