பொங்கல் பரிசு பயனாளிகள் பட்டியலில் விடுபட்டவர்கள், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க செல்லும் போது பொருட்களை வழங்காமல் ஊழியர்கள் திருப்பி அனுப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இது பற்றி பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ரேஷன் கடைக்கு சென்று கருவியில் விரல் ரேகையை பதிவு செய்தும் பொருட்கள் தரவில்லை; ஊழியரிடம் கேட்டால் ஒப்புதல் வரவில்லை என்று பதில் சொல்கின்றனர். இதனால் நாங்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த திமுக ஆட்சியில் ஒரு திட்டம் கூட சரியாக செயல்படுத்த முடிவதில்லை என்ற குற்றச்சாட்டையும் மக்கள் முன்வைத்துள்ளனர்.