கடந்த 80 மற்றும் 90களில் மிக முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி. இவர் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது இயக்குனராகவும் அவர் படங்கள் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ரேவதி, அயோத்தி ராமர் கோவில் பற்றி பதிவிட்டு இருக்கும் பதிவு இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
ஹிந்துக்கள் என்றால்..
‘‘நேற்று ஒரு மறக்க முடியாத நாள். நானா இப்படி.. ராமரின் முகத்தை பார்த்ததும் வந்த உணர்வு அப்படி இருந்தது. எனக்குள் உணர்வுகள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.’’
‘‘விசித்ரமான விஷயம் என்னவென்றால் ஹிந்துக்களாக இருக்கும் நாம் நமது நம்பிக்கைகளை நமக்குள்ளேயே வைத்திருக்கிறோம். அடுத்தவர்களை காயப்படுத்த கூடாது என நினைத்து நாம் அப்படி செய்கிறோம்.’’
‘‘மதச்சார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மீக நம்பிக்கைகளை பர்சனலாக வைத்திருக்க வேண்டும் என்கிற நிலை தான் இருக்கிறது.’’
‘‘ஸ்ரீ ராமரின் வருகை இந்த விஷயத்தை பலரிடம் மாற்றி இருக்கிறது. நாம் ராமரின் பக்தர்கள் என முதல் முறை சத்தமாக சொல்ல இருக்கிறோம். ஜெய் ஸ்ரீ ராம்’’ என ரேவதி தெரிவித்து இருக்கிறார். இவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்பு எல்லாம் தமிழ் சினிமாவை திமுக என்ற மாஃபியா கும்பல் கட்டுப்படுத்தி வந்த நிலையில் தற்போது ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா பற்றி அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களின் ஆதரவை தைரியமாக வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.