காங்கிரஸ் எதிர்க்கட்சியில் அமர முடிவு செய்துள்ளதாகவும், மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்தார்.
நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வருகிற 9ஆம் தேதி நிறைவடையவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்தார்.
அதன் மீது இரு அவைகளிலும் விவாதம் நடந்த நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 05) பேசினார்.
அப்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி;
மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். சிறுபான்மையினர் எனக் கூறியும் எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்துகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நீண்ட நாள்களாகவே எதிர்க்கட்சி வரிசையிலேயே
உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்போதுமே இனி எதிர்க்கட்சி வரிசையில்தான்
இருப்பார்கள். ஒரு எதிர்க்கட்சியாகவும் நாட்டு மக்களை காங்கிரஸ் திருப்திப்படுத்தவில்லை.
காங்கிரஸ் எதிர்க்கட்சியில் அமர முடிவு செய்துள்ளதாகவும், மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள் என்றும் எதிர்க்கட்சிகளை அவர் கிண்டல் செய்தார். நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் உறுதியை நான் பாராட்டுகிறேன் எனத் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடும் சக்தியை எதிர்க்கட்சிகள் இழந்துவிட்டது. இனி வெற்றி பெற வாய்ப்பில்லை. நாட்டிற்கு எப்போதுமே ஒரு ஆரோக்கியமான எதிர்க்கட்சி அவசியம் என்று எப்போதுமே
நான் சொல்வதுண்டு. பலருக்கு தேர்தலில் போட்டியிடும் தகுதியே இல்லை.
சில தொகுதிகளில் பல அதிரடி மாற்றங்களை எதிர்க்கட்சி செய்தது. இந்த முறையும்
போட்டியிடும் தொகுதிகள் மாறலாம். மக்களவைக்கு வருவதற்கு பதிலாக பலர்
மாநிலங்களவைக்கு செல்லவே விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளால் நாட்டிற்கே பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.