400 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க., கூட்டணி வெல்லும் : நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சூளுரை!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மட்டும் 370 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டு வெற்றி
பெறும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டனி 400 தொகுதிகளுக்கு மேல்
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஜனாதிபதி உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வருகிற 9ஆம் தேதி நிறைவடையவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்தார்.

அதன் மீது இரு அவைகளிலும் விவாதம் நடந்த நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் மோடி நேற்று (பிப்ரவரி 05) மாலை பேசினார்.

அப்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி;

மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். சிறுபான்மையினர் எனக் கூறியும் எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்துகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நீண்ட நாள்களாகவே எதிர்க்கட்சி வரிசையிலேயே
உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்போதுமே இனி எதிர்க்கட்சி வரிசையில்தான்
இருப்பார்கள். ஓர் எதிர்க்கட்சியாகவும் நாட்டு மக்களை காங்கிரஸ் திருப்திப்படுத்தவில்லை.

காங்கிரஸ் எதிர்க்கட்சியில் அமர முடிவு செய்துள்ளதாகவும், மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள் என்றார். நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் உறுதியை நான் பாராட்டுகிறேன். தேர்தலில் போட்டியிடும் சக்தியை எதிர்க்கட்சிகள் இழந்துவிட்டதாகவும், இனி வெற்றி பெற வாய்ப்பில்லை.

நாட்டிற்கு எப்போதுமே ஒரு ஆரோக்கியமான எதிர்க்கட்சி அவசியம் என்று எப்போதுமே
நான் சொல்வதுண்டு. பலருக்கு தேர்தலில் போட்டியிடும் தகுதியே இல்லை.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மட்டும் 370 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டு வெற்றி
பெறும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டனி 400 தொகுதிகளுக்கு மேல்
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

காங்கிரஸுக்கு இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. பாஜக மீண்டும் ஆட்சியமைத்து 1000
ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்கும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top