சென்னை அமைந்தகரையில் ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பலகை உடைந்து கீழே விழுந்த பெண் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாங்கள் திராவிட மாடல் அரசு எங்களை நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்துவிட்டது என வெட்டி ஜம்பகம் அடித்துக்கொள்ளும் திமுக, தினமும் லட்சக்கணக்கான பயன்படுத்தி வரும் அரசுப் பேருந்தை புதிதாக வாங்காமல் பழைய பேருந்தை வைத்து காலத்தை ஓட்டி வருகிறது.
அதன்படி மழைக்காலங்களில் பேருந்துகளின் உள்ளேயே பயணிகள் குடைப்பிடித்து செல்கின்றனர். சில பேருந்துகளில் படிக்கட்டுகள் கலந்து கீழே விழுந்ததையும் பார்த்துள்ளோம்.
இந்த நிலையில், சென்னை, திருவேற்காடு, வள்ளலார் நகர் செல்லும் 59வழித்தடம் கொண்ட அரசுப் பேருந்து அமைந்தகரை என்.எஸ்.கே. நகர் சிக்னலை கடந்தபோது பலகை உடைந்ததால் பேருந்தில் இருந்த பெண் ஒருவர் கீழே விழுந்துள்ளார். ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதால் பெண் பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுதான் திராவிட மாடல் அரசா என பொதுமக்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.