நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து மூலக்கரைப்பட்டிக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு பழைய பேருந்துகளாக ஏராளமாக உள்ளது. புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் மூலக்கரைப்பட்டிக்கு சென்ற அரசு பேருந்தின் பின்புற படிக்கட்டுகள் ஏதும் இல்லாமல் மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் முன்பக்கம் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு படிக்கட்டுகள் உள்ளன.
முன்புறமாக பயணிகள், மாணவ, மாணவிகள் ஏறி உள்ளே செல்லும் நிலையில் அதே வழியாக மீண்டும் இறங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் மக்கள் பயணம் செய்யும் நிலையில்தான் திராவிட மாடல் அரசின் பேருந்து உள்ளது. உடனடியாக புதிய பேருந்துகளை விட வேண்டும் என பள்ளி, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.