ஐக்கிய அரபி எமிரேட்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு, கத்தார் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். பிரதமர் மோடி, கத்தார் பிரதமர் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்தார். முன்னதாக பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்றே சொல்லலாம்.
அதாவது இஸ்ரேல் நாட்டிற்கு உளவு பார்த்ததாக கத்தாரில் கைது செய்யப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் சில மாதங்களுக்கு பின் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் தங்களது அரசியல் லாபத்திற்காக எண்ணற்ற கருத்துக்களை தெரிவித்தனர்.
ஒரு சின்ன நாடான கத்தார், இந்தியாவை மிரட்டிப்பார்க்கிறது. ஆனால் பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் பேசியதை நாம் செய்தித்தாள்களில் பார்த்திருப்போம். உடனடியாக கத்தார் உடனான நட்பை இந்தியா துண்டிக்குமா என்றெல்லாம் கனவு கண்டனர்.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திரத்தால் ,கைது செய்யப்பட்ட எட்டு இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் ரத்து செய்து சிறை தண்டனையாக மாற்றியது.
ஒரு சில வாரங்களில் சிறை தண்டனையில் இருந்து விடுதலை செய்வதாக, கத்தார் நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி 8 வீரர்களும் பத்திரமாக தாய் நாடு அழைத்துவரப்பட்டனர்.
இந்த நிலையில்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு கத்தார் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். பிரதமர் மோடி, கத்தார் பிரதமர் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்தார். முன்னதாக பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, நிதி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். கத்தார் பயணம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், இந்தியாவும் கத்தாரும் வரலாற்று ரீதியாக நெருங்கிய உறவை கொண்டுள்ளன என பதிவிட்டுள்ளார்.