காசாவில் இருந்து எகிப்து நாட்டிற்குள் நுழையும் பாலஸ்தீனியஅகதிகளை தடுக்கும் வகையில் மிகப்பிரமாண்டமான முறையில் சுவர் கட்டப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மேலும் நீர், வான்வெளி, நிலப்பரப்பு ஆகிய வழிகளில் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டில் நுழைந்தனர். அப்போது கண்ணில் பட்டவர்களை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். 200க்கும் மேற்பட்ட மக்களை பிணையக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதன் பின்னர் இஸ்ரேல் போரை அறிவித்தது. அதன்படி காசாவில் பதுங்கியுள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறது. தற்போது 4 மாதங்களுக்கும் மேலாக தொடரும் இந்த போரில் ,இதுவரை சுமார் 10 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு பயந்து ஏராளமானோர் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறினர். அதன்படி லட்சக்கணக்கானோர் ,எகிப்து எல்லை நகரமான ரபாவில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ரபா நகருக்கு அருகில் ,ராணுவத்தின் உதவியுடன் எகிப்து எல்லைச்சுவர் எழுப்பி வருகிறது. இது காசாவில் இருந்து தப்பி எகிப்து நாட்டிற்கு செல்லும் அகதிகளை தடுப்பதற்காக இந்த சுவர் கட்டப்பட்டு வருகிறது.
காசாவின் மேற்கு எல்லையில் ஷேக் ஜுவைத்- ராபா நகரங்களை இணைக்கும் சாலையையொட்டி, 3.5 கிமீ தொலைவுக்குச் சுவர் கட்டுமானம் நடைபெற்று வருகிற செயற்கை கோள் படங்களை மேக்ஸர் டெக்னாலஜீஸ் வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய நாடான எகிப்து கூட ,காசா மக்களை அனுமதிக்க தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் மிகவும் கொடூரமானவர்கள் என கூறப்படுகிறது. இதனால்தான் அகதிகள் போர்வையில் ஹமாஸ் பயங்கரவாதிகள், எகிப்து நாட்டிற்குள் உள்நுழைவதை தடுப்பதற்காக ,மிகப்பிரமாண்டமான முறையில் சுவர் எழுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.