சுதந்திரம் அடைந்தபின் முதல்முறையாக தேசிய கொடி : சத்தீஸ்கர் மாநில கிராமத்தில் ஏற்றப்பட்டது!

சுதந்திரம் அடைந்த பின் முதல்முறையாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் , முதல்முறையாக தேசியக் கொடி பட்டொளி வீசி பறந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா – பிஜாப்பூர் மாவட்ட எல்லையில் உள்ளது புவாரி கிராமம். இந்த கிராமத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகளவு இருந்தது. இந்த கிராமத்தில் அவர்கள் சொல்வது தான் சட்டம். தனி அரசாங்கமே நடத்தி வந்த மாவோயிஸ்டுகளை மீறி கிராம மக்கள் ஒன்றும் செய்ய முடியாது.

இந்த கிராமத்தில் இருந்து கொண்டே பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவது, சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்களை மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், மாவோயிஸ்டுகளை ஒடுக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. மாவோயிஸ்டு ஆதிக்கம் உள்ள பகுதிகளில் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டன. இருந்தபோதிலும் திடீரென அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையும் மாவோயிஸ்டுகளின் மறுவாழ்வுக்கான திட்டத்தையும் ,மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் பலனாக மாவோயிஸ்டு இயக்கத்தில் இருந்து  பலர் விலகி வருகின்றனர்.

இந்த நிலையில், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாவோயிஸ்டு ஆதிக்கம் உள்ள புவாரி கிராமத்தில் கடந்த (19.02.2024) அன்று முதல் முறையாக தேசிய கொடி பறக்கவிடப்பட்டது. மேலும், போலீஸ் கண்காணிப்பு சாவடிகளும் அமைக்கப்பட்டன. ஒரு காலத்தில் இந்த கிராமத்துக்குள் போலீஸார் செல்லவே அஞ்சினர்.

தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பாஜக அரசின் தீவிர நடவடிக்கையால் ,மாவோயிஸ்டுகளின் அட்டூழியங்கள் ஒடுக்கப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top