பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு, இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமியன்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ,அங்குள்ள மலைப்பாதையில் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் ,இம்மாத பவுர்ணமியையொட்டி இன்று (24.02.2024) பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ளனர்.

இதையொட்டி திருவண்ணாமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக ,தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இது குறித்து தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (24.02.2024) காலை 9.15 மணிக்கு புறப்படும் ,விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130) காலை 11 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் பகல் 12.40 மணிக்கு, திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் திருவண்ணாமலை-விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) விழுப்புரத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும். இந்த ரயில்கள் தண்டரை, அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், திருக்கோவிலூர், ஆயந்தூர், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top