பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை புரிந்தார்.நேற்று திருநெல்வேலியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றார். அப்போது தனது காரின் படியில் நின்று தொண்டர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தபடி ஊர்வலமாக சென்றார். அப்போது பிரதமர் மோடியை நோக்கி பாஜகவினர் மற்றும் பொது மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
மோடி.. மோடி.. என கோஷமிட்டனர். இந்த வேளையில் ஓவிய பயிற்சி மாணவர்கள் பிரதமர் மோடியை ஓவியமாக வரைந்து எடுத்து வந்திருந்தனர். அவர்கள் பிரதமர் மோடியை பார்த்து அந்த ஓவியத்தை தூக்கிப்பிடித்து காண்பித்து வரவேற்றனர். இதனை கவனித்த பிரதமர் மோடி உடனடியாக தனது பாதுகாவலரிடம் ஓவியத்தை வாங்கி வரும்படி கூறினார்.
இதையடுத்து பாதுகாவலர் மாணவர்கள் வைத்திருந்த பிரதமர் மோடியின் ஓவியத்தில் ஒன்றை வாங்கி சென்றார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.