அய்யா வைகுண்ட சுவாமிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், தாமரைக்குளம் அருகில் உள்ள சாமித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த அய்யா வைகுண்ட சுவாமிகள், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவி வந்த ஜாதி கொடுமைகளுக்கு எதிராக போராடியவர்.
சமூக நீதிக்காக போராடிய வைகுண்டரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
“அய்யா வைகுண்ட சுவாமிகளின் பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன். பிறருக்கு சேவை செய்வதற்கும், அனைவருக்கும் சமமான நீதியுடைய சமுதாயத்தை வளர்ப்பதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அய்யா வைகுண்டர். மனிதகுலத்திற்கான அவரது பார்வையை நிறைவேற்றுவதற்கான, எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.