கர்நாடக சட்டப்பேரவையில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கமிட்டது உண்மை: காங்கிரஸ் ஜிகாதிகள் 3 பேர் கைது!

கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 27ஆம் தேதி மாநிலங்களவை எம்.பி., தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கம் எழுப்பியது உண்மை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த கேடுகெட்ட செயலில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜிகாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சட்டப்பேரவையில் கடந்த 27ஆம் தேதி மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர் ஹூசேன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அவரது ஆதரவாளர்கள் சையத் நசீன் ஹூசேனை வாழ்த்தி  முழக்கம் எழுப்பியதுடன்,   சில ஜிகாதிகள்‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனவும் முழக்கம் எழுப்பினர். இதன் காணொலி கன்னட தனியார் செய்தி சேனல்களில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பியதற்கு பாஜக, மஜத ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதுடன், பெங்களூருவில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். மேலும், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும் கோரினர்.

இதனால் பதறிப்போன முதல்வர் சித்தராமையா, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சம்பவத்தினத்தன்று சட்டப்பேரவையில் எடுக்கப்பட்ட வீடியோ, ஆடியோ பதிவை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பினர்.

இதனையடுத்து, தடயவியல் சோதனை ஆய்வு முடிவில் ,கர்நாடக சட்டப்பேரவையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் எழுப்பியது உண்மை என தெரியவந்துள்ளது. 2 முறை பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பப்பட்டதை தடயவியல் ஆய்வகம் உறுதி செய்துள்ளது. எனவே இது தொடர்பாக மூன்று ஜிகாதிகளை கைது செய்து போலீஸார் விசாரிப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கூறுகையில், ‘‘நாங்கள் கூறியதை இப்போது காங்கிரஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரும் காங்கிரஸ் நிர்வாகிகள். நாட்டுப்பற்று இல்லாமல், பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பும் அளவுக்கு நிர்வாகிகளை காங்கிரஸ் வளர்த்தெடுத்துள்ளது. ஆனால் இந்த உண்மை நன்றாக தெரிந்தும் காங்கிரஸ் எம்.பி.சையத் நசீர் ஹூசேன் மறைத்து வந்தார். அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்’’ என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top