கேரளா கம்யூனிஸ்ட் அரசின் அவலம், அம்பலம்! கடந்த 8 ஆண்டுகளில் 5,839 வேலை வாய்ப்பு மட்டுமே உருவாக்கம் !

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி, கடந்த 8 ஆண்டுகளில் 5,839 வேலை வாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியிருப்பதாக ஆர்.டி.ஐ. தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது.

கேரளாவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் கொள்ளையடித்து தங்களை மட்டுமே வளமாக வைத்துக் கொண்டு வருகின்றனர். மேலும் வேலை வாய்ப்புகளுக்காக அம்மாநில இளைஞர்கள் வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கே அதிகளவு செல்கின்றனர்.

இந்த நிலையில், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சியில் ,கடந்த 8 ஆண்டுகளில் 5,839 வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைத்த பதிலின் மூலம் அம்பலமாகியுள்ளது. மேலும் 2016-2024 இடையேயான காலகட்டத்தில்  1520.69 கோடி ரூபாய் மட்டுமே கேரளாவுக்கு முதலீடாக வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top