தமிழை தாய்மொழியாக கொண்டிராத 10ம் வகுப்பு இஸ்லாமிய மாணவர்களுக்கு, தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து இந்த ஆண்டும் விலக்கு அளிக்கப்பட உள்ளதாக திமுக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் தமிழ் மொழி கட்டாயம் என்ற நடைமுறை உள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இந்த நிலையில், இஸ்லாமிய பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிப்பதாக திமுக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛‛தமிழைத் தாய் மொழியாக கொண்டிராத 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வரும் 26ஆம் தேதி முதல் நடைபெற உள்ள பொதுத்தேர்வில் இருந்து இந்த விலக்கு அளிக்கப்படுகிறது. தமிழ் தேர்வுக்கு பதிலாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக்கூடிய சிறுபான்மை பிரிவு மாணவர்கள் அவர்களுடைய மொழி பாடத்தை தேர்வாக எழுதிக் கொள்ளலாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே தமிழ் மொழி கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பை திமுக அரசு வெளியிடுகிறது.
இதுதான் இவர்கள் தமிழ் மொழியை வளர்க்கும் லட்சணமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலருக்கு தமிழ் பேசவும், எழுதவும் தெரியாத நிலையில்தான் திராவிட மாடல் பள்ளிக்கல்வித்துறையின் அவலநிலை உள்ளது.