சென்னையில் ரூ.15 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் : வருமானவரித்துறை விசாரணை!

சென்னை யானைக் கவுனியில் இன்று காலை (மார்ச் 16) ரூ.15 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை, யானைக் கவுனியில் வாகனசோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக வந்த புரசைவாக்கத்தைச் சேர்ந்த முகமது முஸ்தாக் என்பவரிடம் விசாரணை நடத்தியதில் அவரிடம் ரூ.15 லட்சம் ஹவாலா பணம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, முகமது முஸ்தாக்கிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பணம் போதைப்பொருள் கடத்தலில் வந்ததா எனவும் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வரஉள்ள நிலையில் ஹவாலா பணத்தை வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top