ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புடினுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்.
ரஷ்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சுமார் 87 சதவீத வாக்குகள் பெற்று புடின் அபாரமாக வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து ரஷ்ய அதிபராக அவர் 5-வது முறையாக பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில், ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள புடினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், ரஷ்ய கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட புடினுக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். வரும் ஆண்டுகளில் இந்தியா-ரஷ்யா இடையேயான இருதரப்பு உறவை மற்றும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.