ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை!

முறைகேடு தொடர்பாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனமாக ஜி.ஸ்கொயர் நிறுவனத்தில் இன்று (மார்ச் 21) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

ஜி ஸ்கொயர் நிறுவனம் 2017 முதல் 2020 வரை மிகவும் நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகளில் பல கோடி ரூபாய் சொத்துக்களை குவித்ததாக பல புகார்கள் வந்தது. இதனையடுத்து இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை சென்மேரிஸ் சாலையில் உள்ள ஜீ ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஜீ ஸ்கொயர் நிறுவனம் திமுகவிற்கு நெருக்கமான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் நிர்வாக இயக்குனராக லோட்டஸ் பாலா என்பவர் உள்ளார்.

சென்னையில் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை, அடையாறு, அமைந்தகரை, அண்ணா நகர், உள்ளிட்ட 20 க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதே போல தரமணியில் உள்ள ஐடி நிறுவனம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறந்து வருகிறது ஜி ஸ்கொயர் நிறுவனம். ஆளும் கட்சிக்கு மிக நெருக்கமானவர்தான் இதன் உரிமையாளர் எனவும் சொல்லப்படுகிறது. முறைகேடாக பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. வருமான வரித்துறை சோதனை முடிவில் பல்வேறு ஆவணங்கள் கிடைக்கப்பெறலாம் என கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top