மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு (மார்ச் 21) அமலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு டெல்லி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். ஊழலுக்காக எதிராக கட்சி ஆரம்பித்து அவரே இப்படி ஊழல் செய்துள்ளார் என்று டெல்லி மக்கள், கெஜ்ரிவால் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரவிந்த் கெஜ்ரிவாலும், அன்னா ஹசாரே குழுவினரும் அப்போதைய டெல்லி முதல்வர் ஷீலா தீக்சித் மீதும், காங்கிரஸ் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொறுப்பின்றி அள்ளி வீசினர். இதுவரை அந்த ஆதாரங்கள் வெளிவரவில்லை. இப்போது, தன் வினை தன்னைச்சுடுகிறது. இவ்வாறு ஷர்மிஸ்தா முகர்ஜி கூறினார்.