அரசியலுக்கு வந்த நல்ல மனிதர் விஜயகாந்தை சிலர் காமெடி ஆக்கிவிட்டார்கள். அதேபோல் சில கட்சிகளின்
ஏவுகணையாக அண்ணாமலையிடம் அதே சூழ்ச்சியை மேற்கொள்கிறார்கள். இங்கே சூழ்ச்சி வீழ்ச்சியாகும் என
திரைப்பட இயக்குனரும், பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு துணை தலைவருமான
பேரரசு தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் பத்திரிகையாளர்களை
சந்தித்தார். அப்போது அவரிடம் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகியது குறித்தும், அவர் முன்வைத்த
குற்றச்சாட்டுகள் பற்றியும், அவரது ரபேல் வாட்ச் பற்றியும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது புதிய
தலைமுறை தொலைக்காட்சி நிருபர் திட்டமிட்டு அண்ணாமலையின் கோவத்தை கிளறும் வகையில் நடந்துகொண்டார்.
தக்க பதிலடி கொடுக்காமல் அவரை சரி செய்ய முடியாது என்பதால் மாநில தலைவர் அண்ணாமலை ஊடகங்களின்
பெயரை கேட்டு அவர்களையும் ஊடகங்களையும் விமர்சித்தார். மேலும் தான் தரும் ஆதாரங்களின் அடிப்படையில்
பி.ஜி. ஆர் முறைகேடு குறித்து அரை மணிநேரம் செய்தி வெளியிடும்படி குறிப்பிட்ட புதிய தலைமுறை
தொலைக்காட்சியின் நிருபரிடம் கூறினார்.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் அண்ணாமலைக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு அளித்து
வருகின்றனர். பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு அண்ணாமலையின்
பாணியில்தான் பதில் அளிக்கப்படும் எனக்கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் திரைப்பட இயக்குனரான பேரரசு
அண்ணாமலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இயக்குனர் பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியலுக்கு
வந்த நல்ல மனிதர் விஜயகாந்த. கட்சி சார்ந்த சில பத்திரிகையாளர்களின் நடவடிக்கையால் அந்த நல்ல மனிதரை
காமெடி ஆக்கிவிட்டார்கள். தற்பொழுது அதேபோல் ஒரு சில கட்சிகளின் ஏவுகணையாக அண்ணாமலையிடம் அதே
சூழ்ச்சியை மேற்கொள்கிறார்கள். இங்கே சூழ்ச்சி வீழ்ச்சியாகும்” என தெரிவித்துள்ளார்.
பேரரசு சொன்னது உண்மை என்பதுபோல் ஆதாரம் அளித்தும் புதிய தலைமுறையால் அதனை வெளியிட
துணிவில்லை. ஆனால், தேவையில்லாத விஷயத்தை ஊதி பெரிதாக்கியுள்ளது இந்த ஒரு சார்பு ஊடகங்கள்.