அடுத்த மாதம், அதாவது பிப்ரவரி 1ல் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் அறிக்கையின் குறிப்பிட்ட சில பகுதிகள், பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு கசிய விடப்பட்டுள்ளன. இது தொடர்பில் மத்திய நிதி
அமைச்சக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய நிதி அமைச்சகத்தில் பணியாற்றும் சுமித், 30, என்ற ஊழியர், ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக பட்ஜெட் அறிக்கையின்
சில பகுதிகளை பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு பகிர்ந்துள்ளார். ஆனால், பட்ஜெட்டின் எந்த பகுதி கசிந்தது என்ற
விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
மத்திய நிதி அமைச்சகம் இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியிடவில்லை. ஒப்பந்த
அடிப்படையில் பணியாற்றி வந்த அந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். முதல் கட்ட விசாரணையில், அவர்
பாகிஸ்தானுக்கு முக்கியமான தகவல்களை அளிக்கும் உளவாளியாக செயல்பட்டதும், அதற்காக கணிசமான பணத்தை
அவர்களிடமிருந்து பெற்றதும் தெரிய வந்துள்ளது.
தகவல்களை பரிமாறுவதற்காக அவர் பயன்படுத்திய மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்,
அவர் ஏதாவது முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பகிர்ந்துள்ளாரா என விசாரணை நடந்து வருகிறது.
இது ஊழலும், தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும் நிறைந்த முன்னாள் காங்கிரஸ் அரசு அல்ல. தேச பக்தி கொண்ட
ஒப்பற்ற தலைவர் மோடி ஆளுமையில், உலகம் வியந்து நோக்கும் இந்திய அரசு. ஒரு தவறு நடந்து 10 அல்லது 15
ஆண்டுகள் கழித்து, விசாரணை அமைத்து நடவடிக்கை எடுக்கும் அரசு அல்ல இந்த அரசு. உடனுக்குடன் உடன்
துரோகிகளும், உளவாளிகளும் சட்டப்படி தண்டிக்கப்படுவர்.