செல்லும் இடமெல்லாம் தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு வாக்கு வங்கிக்காக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுக்க வலம் வந்தார். ஹிந்து விரோத கட்சியாகவே மாறிவிட்ட காங்கிரசின் நடவடிக்கைகள் ஹிந்துக்களை மேலும் புறக்கணிக்கும் வகையில் கர்நாடக தேர்தலுக்கு முழுக்க முழுக்க இஸ்லாமியர்களை குஷிப்படுத்தும் விதத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே அந்தோணியின் கடந்த கால பேச்சுகளில் இருந்து சிலவற்றை நாம் இங்கே நினைவு கூர்வோம்: 2014 தேர்தல் தோல்விக்குப் பின் ஏ.கே அந்தோனி: “காங்கிரஸின் மைனாரிட்டி அடிவருடித்தனத்தால் காங்கிரஸ் தோற்றது. மைனாரிட்டி அடிவருடித்தனத்தை கைவிட வேண்டும்” என்றார். பின்னர், 2022ல் “2024இல் ஜெயிக்க வேண்டுமானால் காங்கிரஸ் மைனாரிட்டி கட்சியாக இருக்கக் கூடாது” என்றார். மறுபடியும், 2023 ஜனவரியில் “காங்கிரஸ் மைனாரிட்டி கட்சியாக இருக்கக் கூடாது” என அறிவுரை வழங்கினார். ஆனால், இதையெல்லாம் கண்டு கொள்ளாத காங்கிரஸ் மீண்டும் வாக்கு அரசியலுக்கு சிறுபான்மையினரை மையப்படுத்தி தன் கர்நாடக அரசியலில் ஆழம் பார்க்க திட்டமிட்டுள்ளது.
பத்திரிகைகளில் வந்த செய்திகளின் படி,கீழ்க்காணும் சிறப்பு சலுகைகள் சிறுபான்மை மக்களுக்கு கர்நாடக காங்கிரஸ் அரசின் வாக்குறுதிகள்:
-* சர்ச் மற்றும் மசூதிக்கு இலவச மின்சாரம்.
-* வெளிநாட்டில் படிக்க விரும்பும் முஸ்லீம் மாணவர்களுக்கு 20 லட்சம் மானியம்.
-* முஸ்லிம்களுக்கு தனி உறைவிடப் பள்ளி.
-* முஸ்லிம்களுக்கு தனி மருத்துவமனைகள்.
-* அரசு அலுவலகங்களில் உருது மொழியைத் தொடர்பு மொழியாக்குவோம்.
-* இமாம்களுக்கு மாதாந்திர தொகை ரூ 6000 வழங்கப்படும்.
-* மத்ரஸாக்கள் அனைத்தும் நவீனமயமாக்கல்.
-* முஸ்லிம்களுக்கு வீடு கட்ட 5 லட்சம்.
-* முஸ்லீம் பெண்களுக்கு ஸ்டார்ட் அப் தொழில் தொடங்க 5 லட்சம் அதில் 80% மானியம்.
என தனது பிரித்தாலும் கொள்கையின்படி இஸ்லாமியர்களுக்கு வாரி வழங்கியுள்ளது ஹிந்து விரோத காங்கிரஸ். ஹிந்துக்கள் விழித்தெழுந்து கர்நாடக காங்கிரஸின் சூழ்ச்சியை புரிந்துகொண்டு காங்கிரசை மண்ணை கவ்வ வைப்பார்கள் என ஹிந்து இயக்கத்தவர்கள் கூறுகிறார்கள்.