“போடா ” பின்னந் தலையில் பளார் என அடித்த கே.என் நேரு – அண்ணாமலை கண்டனம்

“போடா ” பின்னந் தலையில் பளார் என அடித்த கே.என் நேரு – அண்ணாமலை கண்டனம்

அண்மைக்காலமாக திமுக அமைச்சர்கள் பொது இடங்களில் வைத்து தொண்டர்களையும், பொதுமக்களையும் தாக்கி அவமானப்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. அண்மையில் திமுக நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை பார்வையிட சென்ற அமைச்சர் நாசர் தொண்டர் மீது கல்லை தூக்கி எறியும் வீடியோ வைரலானது. அப்போது சுற்றி இருந்தவர்களும் சிரித்து கொண்டே கடந்து செல்ல உடன்பிறப்புகள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் தானா என கேள்வி எழுந்தது.

ஏற்கனவே அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் இதேபோன்று தொண்டர்களையும் பொதுமக்களையும் தரக்குறைவாக நடத்தி வீடியோக்களில் சிக்கினர். இப்படி பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கே.என் நேரு மீண்டும் ஒருமுறை தனது தரக்குறைவு செயலை காட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் திராவிடத்தின் சின்னவர் அமைச்சர் உதயநிதிக்கு திமுக சார்பில் வரவேற்பு அளிக்கபட்டது. இதில் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சால்வை, நினைவு பரிசு, மலர் மாலை உள்ளிட்டவற்றை உதயநிதிக்கு அளிக்க வந்த போது தொண்டர் ஒருவரை நகர் புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் .நேரு “வேகமா போடா” என தலையில் அடித்து தள்ளினார். அடுத்தடுத்து வந்த தொண்டர்களையும் இதேபோன்று தாக்கியும், தள்ளிவிட்டும் அராஜகத்தில் ஈடுபட்டார்

இந்த செயல் திமுகவினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதோ, இல்லையோ சாதாரண பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேடைகளிலியே இதுபோன்ற செயல்களில் திமுக அமைச்சர்கள் ஈடுபட்டால், தனியாக இருக்கும் போது திமுக தொண்டர்களை எவ்வாறு நடத்துவார்கள் என கேள்வி எழுந்துள்ளது. அமைச்சர் கே.என் நேருவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இத்தகைய அமைச்சர்களிடம் இருந்து தமிழ்நாட்டு மக்கள் தங்களை தாங்களே தற்காத்து கொள்ள, பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top