பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா ( ஆங்:PMGKAY)பிரதம மந்திரியின் ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்புத் திட்டம் ) என்பது இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, மார்ச் 26, 2020 அன்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு நலத் திட்டமாகும். [1] இந்தத் திட்டம் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ்உணவு மற்றும் பொது விநியோகத் துறையால் இயக்கப்படுகிறது. ஆனால் நோடல் அமைச்சகம் நிதி அமைச்சகம் ஆகும்.
அனைத்து முன்னுரிமை குடும்பங்களுக்கும் (குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தால் அடையாளம் காணப்பட்டவர்கள்) பொது விநியோக முறை மூலம் தானியங்களை வழங்குவதன் மூலம் இந்தியாவின் ஏழை குடிமக்களுக்கு உணவளிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்படி, ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை (பிராந்திய உணவு விருப்பங்களின்படி) மற்றும் குடும்ப அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கிலோ பருப்பு வழங்கப்படுகிறது. [2] வழக்கமாக வாங்கும் தானியங்களுடன் இந்த அளவு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான மொத்த செலவையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது.[3] இந்த நலத்திட்டத்தின் அளவானது, உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டமாக அமைகிறது. [4]
https://ta.wikipedia.org/wiki/பிரதமமந்திரிஏழைகளுக்கானஉணவுப்பாதுகாப்பு_திட்டம்