தமிழக அரசு உங்களோடு இல்லை, நாங்கள் இருக்கிறோம்
-ராணுவ வீரர்களுக்கு அண்ணாமலை உறுதி (Banner News)

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் பிரபு  அவர்கள் திமுக கவுன்சிலரால்  படுகொலை
செய்யப்பட்டது, மற்றும் கட்சியின்  பட்டியலின  அணித் தலைவர் தடா பெரியசாமி அவர்களின் இல்லத்தின் மீது
நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றைக் கண்டித்து நேற்றைய தினம் (21.2.23)  அன்று  சென்னை போர் நினைவுச்
சின்னம்  அருகே தமிழக பாஜக உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தும்  பேரணி நடத்தியது
இந்நிகழ்ச்சியில் தலைவர் அண்ணாமலை அவர்கள் ஆற்றிய உரைவருமாறு:  
முன்னாள்  ராணுவ வீரர்களை ஒரு அரசியல் மேடையில் ஏற்றுவது சரியல்லதான். அதுவும் காலை எட்டு முதல்
 மாலை 6 வரை உண்ணாவிரதம்  இருக்கிறார்கள். இங்கு கூடியிருக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள்
சாதாரணமானவர்கள் அல்ல . 1962 ( சீனப்போர்), 1965 இந்தியா -பாகிஸ்தான் போர்   1971 ( பங்களாதேஷ்
தொடர்பாக பாகிஸ்தானுடன் போர்),  1999 ( கார்கில் யுத்தம்) இவற்றில் நம் நாட்டுக்கு வெற்றியை
ஈட்டிதந்தவர்கள்.
கர்னல் எஸ் வீ ஸ்ரீதர் ,லெப்டினன்ட் கர்னல் பாண்டியன், கர்னல் உதயகுமார் லெப்டினன்ட் கர்னல் பால்ராஜ்,
 மேஜர் மதன்குமார் ஆகியோர் இங்கு உள்ளனர். பாஜகவின் முன்னாள் ராணுவத்தினர் பிரிவின் தலைவர்
லெப்டினன்ட் ராமன் அவர்கள் ,ப்ரபாரி கர்னல் பாண்டியன் , கேப்டன் செல்வராஜ்,கமாண்டர் தீபக், கமாண்டர்
மகேஷ், கேப்டன்செந்தில்,இளநிலை அதிகாரிகள் , மேலும் நமது கட்சியின் தலைவர்கள், பிரிவுகளின் தலைவர்கள்
இங்கு உள்ளனர்.
 
அறுபது ஆண்டு காலமாக பட்டியலின  மக்களை ஏமாற்றி அரசியல் செய்து வரும் கட்சி போன்றதல்ல நம் கட்சி.
தடா பெரியசாமி வீட்டின் மீது தாக்குதல்  நடத்தினர்.  அவரது காரை சேதப்படுத்தினர். நாங்கள் அதைப் புதிது
போல் மாற்றித் தருவதற்கான செலவை ஏற்றுக் கொள்வோம். அதையும் சேதப்படுத்தினால்  அவருக்கு
 ஹெலிகாப்டர்  தருவோம்.  அதற்கான மன மற்றும் பொருளாதார வலிமை கொண்டது  பாரதீய ஜனதா கட்சி.
 
வேலூரில் கம்மவார்  பேட்டை என்ற ஊர் உள்ளது, அங்கு முதல்  மற்றும் இரண்டாவது உலகப் போரில் பங்கு
கொண்டவர்கள், அவர்களது வழி வந்தவர்கள்  வசித்து வருகிறார்கள்.
 
இங்கு ராணுவத்தினருக்கு மரியாதை  இல்லை என்பது தவறு.  ஒரு  குறிப்பிட்ட கட்சியும் அதன் கூட்டணிக்
 கட்சிகளும் மரியாதை தரவில்லை. தமிழகத்தில் 10 லட்சம் மக்களுக்கு 23 பேர் ராணுவத்தில் பணி  புரிகின்றனர்.
மற்ற சில மாநிலங்களைப்  பார்த்தால்  இது அதிகம்தான். தமிழகத்திலிருந்து முதல் வீர் சக்ரா விருது லால்குடியைச்
சேர்ந்த  லான்ஸ் நாயக் மடலை முத்துவிற்குக்  கிடைத்தது. 1965 போரில் பாகிஸ்தானின் இரண்டு விமானங்களை
அவர்  சுட்டு வீழ்த்தினார். இன்றும் திருச்சி டிபென்ஸ்  காலனியில் அவருக்கு ஒரு  நினைவுச் சின்னம் உள்ளது,
ஷவுர்ய  சக்ரா மேஜர் கார்த்திக் ராஜா, சுப்ரமணியம் ஆனந்த், மேஜர் முகுந்த் வரதராஜன்,லெப்டினன்ட் கர்னல்
ஸ்ரீராம் குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அசோக் சக்ரா வாங்கியவர்களும்  உள்ளனர்.
மிக உயரிய விருதான பரம் வீர் சக்ரா மேஜர் ராமசாமி  பரமேஸ்வரன் அவர்களுக்குக்   கிடைத்தது.  நமது பிரதமர்
 நாட்டுக்காக உயர் நீத்த தியாகிகளின் பெயர்களை நமது தீவுகளுக்கு வைத்துள்ளார்.  அதன் அடிப்படையில்
பரமேஸ்வரன் தீவு என்று  ஒரு தீவுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு  தேசிய உணர்வு கொண்ட மாநிலம்.
ஆகவே இங்கு ராணுவத்துக்கு மதிப்பு  இல்லை என்பது தவறானது. மேஜர் மதன் குமாரின்   யு ட் யூப்  வீடியோ
வெளிவந்தால் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் பார்க்கிறார்கள்.


இத்தனை காலம் தமிழக அரசியல் கட்சிகள் ராணுவத்தினருக்கு ஆதரவு அளிக்கவில்லை ஏனென்றால் அவர்களின்  
ஓட்டு மொத்தமாகக்  கிடைக்காது. இவர்களால்  நமக்கு என்ன லாபம் என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்தனர்.
நான் அனைத்து அரசிய கட்சிகளுக்கு என்ன கூறுகிறேன் என்றால் நீங்களும் நமது ராணுவத்தினருக்கு ஆதரவு
அளியுங்கள் என்றுதான். தமிழகம் முழுமையாக ஆதரவு அளித்தால்தான் எங்கேயோ நாட்டின் எல்லையில்  மைனஸ்
 40 டிகிரி குளிரில் அடுத்த தோட்டா எப்போது வரும் என்று நமக்காகப்  பணி  செய்யும்  தமிழகத்தைச் சேர்ந்த
 இந்திய வீரர்களுக்கு நம்மிடமிருந்து ஒரு செய்தி செல்லும். நமக்கு ஏதாவது ஒன்று என்றால் நமது குடும்பத்தைக்
காப்பாற்ற நமது  ராணுவத்தினர் உள்ளனர். ஆகவே ராணுவத்தினருக்காக இயக்கம் நடத்தினால் அனைத்து
கட்சிகளும்  அதில் இணையுங்கள்

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலில் நமது 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

‘இதற்குப்  பதிலடி தருவோம். ஆனால் அதற்கான நேரத்தையும் காலத்தையும் இந்தியாதான்  முடிவு செய்யும்’ என்று
பிரதமர்  கூறினார். பொதுவாக அமெரிக்காதான் இம்மாதிரி கூறுவது வழக்கம்,
நமது  விமானப்படை பாகிஸ்தானுக்குள்  நுழைந்து ஜெய்ஷ்  ஏ முஹம்மத் பயங்கரவாத முகாமைத் தாக்கி அழித்தது.
இன்னொரு பகுதியில் பாகிஸ்தானின் எப் 16 விமானம் நமது பகுதிக்குள் ஊடுருவ முயன்றது,
விங் கமாண்டர் வர்த்தமான்  அபிநந்தன் அவர்கள் ஒரு மிக் 16  போர் விமானத்தில்  பறந்து பாகிஸ்தானின் ஒரு எப்
16 விமானத்தை வீழ்த்தினார்.எப் 16 என்பது மிகவும் நவீனமான நான்காவது தலைமுறை அமெரிக்கப் போர்
விமானமாகும். ஆனால் மிக் 16 என்பது இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த ஒன்றுதான். அப்படிப்பட்ட ஒரு
விமானம் ஒரு எப் 16 ஐ வீழ்த்தியது அதுவரைக்கும்  நடந்திராத ஒன்று. அபிநந்தன் அவர்களது விமானமும்
வீழ்த்தப்பட்டு அவர் பாகிஸ்தான் எல்லைக்குள் இறங்கினார்.
பாகிஸ்தானியரால்   பிடிக்கப்பட்டு  சித்திரவதைக்கு  ஆளாக்கப்பட்டார். விங் கமேண்டர் அபிநந்தன்  ’24 மணி
நேரத்துக்குள் அவரை விடுவிக்கவில்லை என்றால் எந்தப் எந்தப் பேச்சு  வார்த்தையும் நடத்த மாட்டோம்.
இந்தியாவுடைய முழு ராணுவத்தையும்  உபயோகித்து பாகிஸ்தானை துவம்சம் செய்வோம் ‘ என்றார் நமது
பிரதமர்.
 
தேசப் பற்றும் வீரமும் உள்ள தாயின்  தாய்ப்பாலைக்  குடித்து  வளர்ந்து தேசியத்தின் பக்கம் இருந்தால் மட்டுமே
 ஒரு மனிதனால் அவ்வாறு பேச  முடியும்.  ஸ்டாலின் போன்றவர்களுக்கு சுட்டுப்  போட்டாலும் இத்தகைய
உணர்வு வராது.
24 மணி நேரத்தில் பாகிஸ்தான் அவரை நம்மிடம் ஒப்படைத்தது.நாம் பதிலுக்கு எதையும் அவர்களுக்கு
அளிக்கவில்லை. நமது பிரதமர்  துணிந்து எதையும் பணயம் வைப்பார்.
பாகிஸ்தானின் கோரி ஏவு கணையை வைத்து 1500 கிமி வரை தாக்குதல் நடத்தலாம். ஆனால் கண்டம் விட்டு
கண்டம் பாயும்  நமது அக்னி -5 ஏவுகணை 12000 கிமி வரை சென்று தாக்கக் கூடியது.
அதனால்தான் பாகிஸ்தான் , சீனா எல்லாம் கப்சிப்  என்று இருக்கின்றனர். இங்கிருக்கும் திமுகவினருக்கு
இதைப்பற்றியெல்லாம்  ஒன்றும் தெரியாது.
 
திமுக கவுன்சிலரால் படுகொலை செய்யப்பட் ட லான்ஸ் நாயக் பிரபு குடும்பத்தில் இரண்டு பேர் ராணுவத்தில்
உள்ளனர். நான் அரசியலில் நுழைந்தபோது ‘அண்ணாமலை அரசியலுக்கு ஒத்து வரமாட்டான் , ஏனென்றால்
போலீஸ்காரர்கள் எதையும்  கருப்பு வெள்ளையாகத்தான் பார்ப்பார்கள்,அவரகள நியாயம் நேர்மை என்று
பேசுவார்கள் ;ஆனால் மற்றவர்கள் பேசமாட்டர்கள்’ என்று கூறினர்.  கட்சியில் யாராவது ஒரு முன்னாள்
 காவல்துறை அதிகாரி சேரும்போது  இவருக்கு  அரசியல்  லாயக்காக இருக்குமா  என்று யோசிப்பேன்
 
ராணுவம் போன்ற துறைகளில் பனி புரிபவர்கள்  கட்டுப்பாடு மிக்கவர்கள், பல ஆண்டுகள் பணி  செய்து
சமுதாயத்துக்குள் வரும்போது அவர்களுக்கு மன உளைச்சல்  ஏற்படும் அவர்களைப்  பார்த்துக்கொள்ள
வேண்டியது நமது நமது கடமை.
ஹிமாசல்  பிரதேசத்தில்  ஒரு லட்சம் பேருக்கு 402 பேர் ராணுவத்தில் உள்ளனர்.  ஹரியானா 122,  ஜம்மு காஷ்மீர்
185  .தமிழ் நாடு 23 பேர் .  வட பாரதத்தில் ஒரு கிராமத்தில் 15 , 20 பேர் இருப்பார்கள்  தமிழ்நாட்டில் ஒருவர்தான்
இருப்பார் அவர்கள் தவறே செய்ய மாட்டார்கள்.
ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் வீட்டுக்கு  வருவார்கள்  குழந்தையின் பிறந்த நாள், திருமண நாள் எதிலும் பங்கேற்க
முடியாது.  அவர்களது  மனோ  நிலையை உணர்ந்து பாருங்கள்.
 
பிரபு அவர்களது படுகொலை  ‘ஒரு சின்ன பிரச்னை ‘ என்று  திமுக வினர் கூறுகின்றனர். இது எப்படி சின்ன
பிரச்னையாகும்? அந்த  திமுக கவுன்சிலருக்கும் இந்தக் குடும்பத்தினர் ஒட்டு போட்டிருப்பார்கள் அல்லவா?
இரண்டு நாட்களுக்கு முன்பு  டில்லி ஜவஹர்லால்  நேரு பல்கலைக்கழகத்தில்  கம்யூனிஸ்டு மாணவர்
யூனியனுக்கும்  அகில பாரத வித்யார்த்தி பரிஷத்துக்கும் பிரச்னை. அதில் ஒரு தமிழக மாணவருக்கு லேசான காயம்

.உடனே ஸ்டாலின் பொங்குகிறார். ‘ தமிழ்  நாட்டை, தமிழனைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள்’ என்றெல்லாம்.
இவரைப்  போன்ற  முட்டாள்களை  எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
 இந்த மாதிரி அடி முட்டாள்களை இந்தியாவே பார்த்திருக்காது. நீங்கள்தான் தமிழ்நாடு எல்லையையே
தாண்டியதில்லையே !உங்களுக்கென்ன கவலை ?தமிழ நாட்டுக்கு வெளியே உள்ள தமிழர்களை நாங்கள் பார்த்துக்
கொள்கிறோம்.
 
ஸ்ரீலங்கா  தமிழர் பிரச்னையை   நீங்கள் எவ்வளவு  சொதப்பியுள்ளீர்கள்?
அதைச் சரி செய்வதற்கு எங்களுக்குப்  பத்து ஆண்டுகள் பிடித்தது. நீங்கள்தான் கும்மிடிப்பூண்டியையோ
தாண்டியதில்லையே. பிறகென்ன? திமுகவினருக்கு இவர்களுக்கு சீருடையில் இருப்பவர்களையே  பிடிக்காது
 அவர்கள் ராணுவத்தினரோ, கடற்படையினரோ,விமானப் படையினரோ, காவல் துறையினரோ யாராக
இருந்தாலும். சரி, . அவர்களை பொறுத்தவரை காவல்துறை அடிமைதான். தாங்களோ சொன்னதைச்   செய்ய
வேண்டும். கட்டப்பஞ்சாயத்து செய்ய வேண்டும். ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு  ஏதாவது பிரச்னை என்றாலோ
யாரையாவது கையெழுத்து போட  வைக்க வேண்டும். இதைத்தான் முதலமைச்சர்  காவல் துறையிடம்
எதிர்பார்க்கிறார்.
 
ஸ்டாலின்   ட்விட்டரில் கம்பு சுற்றுகிறார்.  மாணவரின் அடையாள அட்டையைப்  பார்த்து ‘இவர்  தமிழகத்தின்
 அரக்கோணத்தைச்  சேர்ந்த மாணவர்’ என்று பார்த்து அடித்தார்களாம் !இதை என்ன சொல்வது?. தமிழ்நாட்டில்
ஒரு ரவுடிப் பையனுக்குக்  கூட  சட்டத்தின் மீது பயம் கிடையாது.சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஒரே நாளில்
ஒன்பது கொலைகள்!. திமுக ஆட்சிக்கு வந்த முதல் மாதத்தில் முக மூடி போட்டு வந்து வெட்டினான். ஆறாவது
மாதம்  ஹெல்மெட் போட்டு வந்து வெட்டினான்  இப்போது முழு முகத்தையும் கேமராவுக்குக் காட்டிக் கொண்டு
வெட்டுகிறான். இதுதான் சட்டம் ஒழுங்கின் லட்சணம்!
 
இதை  டீவியில் பார்த்து கடலூரில்  நம்ம  எம்பி  ஊழியரைக் கொலை செய்ததற்கு ஒரு நடவடிக்கையும்  இல்லை
ஆகவே நமக்கு என்ன ஆகி விடப்போகிறது என்று ஒரு திமுக கவுன்சிலர் கம்பு சுற்றி கொண்டு வந்து  பிரபு
போன்றவர்களை கொலை செய்கிறார்கள்.
ஒரே நாளில்  ஒன்பது கொலைகள்! முதல் கொலை செய்தபோதே காவல் துறை அவனுக்குக்  கையில்லாமல்
செய்திருந்தால்   ஒரு ராணுவ வீரரைக் கொலை செய்ய சின்னசாமிக்கு எப்படி தைர்யம் வந்திருக்கும்?
அய்யா துரை அசோக் அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். இரண்டு முறை தங்கி யுத்தத்தில் காயம் அடைந்தவர்,
அவரால் நடக்கக்  கூட முடியாது அவர் இங்கு  அமர்ந்திருக்கிறார். நாட்டுக்காக  உழைத்தவர்களை இங்குக்
 கொண்டு வந்து உட்கார வைத்த  துர்ப்பாக்கிய நிலைமைக்கு பாஜக தள்ளப்பட்டு விட்டது. நாம்  மெழுகுவர்த்திப்
 பேரணி நடத்துகிறோம் மெழுகு வர்த்தி என்றவுடன் நினைவுக்கு வருகிறது சில சம்பங்கள்.
ஹரியானாவில் எங்காவது ஒரு நாய் செத்திருக்கும்.அங்கு பாஜக ஆட்சியில் இருக்கும். உடனே  அதற்குக்  காரணம்
பாஜக ஆட்சி என்று கனிமொழி மெழுகுவர்த்தி ஏந்திச்  செல்வார். உபியில் ஒரு குரங்குக்கு வயிறு சரியில்லை
என்றால் அதற்குக்  காரணம் முதலமைச்சர் யோகிதான் என்று கிளம்பி விடுவார்கள்.
அந்த  ‘ஜந்தர் மந்தர்  கும்பல்’ மெழுகுவர்த்தி ஏந்தி குறுக்கும் நெடுக்கும் செல்லும். இப்போது அவர்கள் எங்கே?
மெழுவர்த்தி என்பது  எரிந்து எரிந்து  மொத்தமாக மறைந்து விடும் அதுபோல்தான் உங்கள் ஆட்சி.
ஏதோ நாளைக்  காலையே  பிரபு  குடும்பத்தினரை முதலமைச்சர் சந்தித்து மன்னிப்புக்  கேட்டு, ஆறுதல் சொல்லி
எங்கள் கட்சிக்காரன் செய்தது தவறு என்று  சொல்லிவிடப் போகிறீர்கள் என்பதற்காக நாங்கள் இதைச்
செய்யவில்லை. அது உங்கள் வாழ்க்கையிலேயே இல்லை. அப்படி இருந்தால் சுடாலினின்  தகப்பானரும், மற்ற
திமுக மூத்த தலைவர்களும் பிரிவினை வாதத்தில் ஊறியிருப்பார்களா? ஏன் செய்கிறோம் என்றால் உங்களது
அடாவடித்தனத்தை தமிழகம் இன்னும் கொஞ்ச காலத்துக்குப்  பொறுத்துக் கொள்ள வேண்டும்
 என்பதற்காகத்தான்.  ஆகவே உங்களது ஆட்சி எப்போது எரிந்து போகும் என்பது தெரியாது. காலமும், அரசும்,
ஜனாதிபதியும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
 
ஈரோடு கிழக்கில் ஆடுகளை  வைப்பது போல் தகர  ஷீட்டுகளால்  வேயப்பட்ட  மனிதப் பட்டிகளில் திமுகவினர்
மக்களை அடைத்து வைத்துள்ளனர்   238 பூத்துகளுக்கு 238 பட்டிகள் அமைத்துள்ளார்.அதில்  மனிதர்களை
அடைந்து வைத்துள்ளனர். அவர்களது  வேலை காலையிலிருந்து மாலை  வரை உள்ளே இருக்க வேண்டும்.

எதிர்க் கட்சிகளின் பிரசாரத்துக்கு  அவர்கள் போகக் கூடாது. ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய். பத்து பட்டிகளுக்கு
ஒரு அமைச்சகர் பொறுப்பு. உகாண்டா, சூடான் போன்ற நாடுகளில் கூட இம்மாதிரி நடைபெறவில்லை.
 ஸ்டாலினுக்கு திராவிடமாடல் பேச வெட்கமாக இல்லையா? உ.பி, பீகாரைப்   பற்றி பேசுகிறார். அங்கு
 இம்மாதிரி மக்களை பட்டியில்  அடைக்கவில்லை.
 
தமிழக  மக்கள் உணர வேண்டும். நாங்கள் பிரபு என்ற ஒரு சாதாரண மனிதனுக்காகப் போராடுகிறோம்.
ராணுவவீரன் என்ற  அடையாளம்  மட்டுமே அவருக்கு உள்ளது. எந்த ஒரு கட்சி ஒரு சாதாராண  மனிதனுக்காகப்
போராடுகிறதோ அந்தக் கட்சிதான் உங்களுக்காகவும் போராடும். இதை உணருங்கள்.. மக்களுக்கான ஒரே கட்சி
பாரதீய ஜனதா கட்சி.
பாஜக  சார்பாக ஒரு அறிவிப்பை வெளியிடுகின்றேன். பிரபு அவரகளது குடும்பத்தைப்  பார்த்துக் கொள்ள
வேண்டியது நமது பொறுப்பு பாஜக சார்பாக பிரபு அவர்களின் மனைவியிடம்  10 லட்ச ரூபாக்கான காசோலையை
நாம் அளிப்போம். இது ஆரம்பம்  மட்டுமே. அவர்களது இரண்டு  குழந்தைகளையும்  காலம் பூராவும்  படிக்க வைக்க
வேண்டிய பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் அந்தக் குடும்பத்துக்கு அரணாக இருப்போம்.
எல்லையில் இருக்கும் வீரர்களுக்கு நாங்கள்  சொல்கிறோம்: ‘தமிழக அரசு  உங்களுடன் இல்லை. ஆனால் நாங்கள்
இருக்கிறோம் உங்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது, அதில் குண்டு உள்ளது. கட்டளையிட மோடி அவர்கள்
உள்ளார். எதிரியை சுட்டுத்தள்ளுங்கள் மற்றதை தமிழக பாஜக பார்த்துக் கொள்ளும்.
ராணுவத்தில் நீங்கள்  சொல்வீர்கள் ‘பின்பக்கம் உள்ள பெயரை (வீரரது பெயர்) விட முன்பக்கம் உள்ள பெயர்தான்
(இந்திய ராணுவம்) அதிக முக்கியத்துவம்  வாய்ந்தது என்று.
காலம் மாறும் காட்சிகள் மாறும் வரும் காலம் நமது காலம். பாரத் மாத கி ஜெய்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top