அக்னிபத் வீரர் – மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்!

அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களுக்கான (ஆண்கள்) அறிவிக்கை கடந்த 15ம் தேதி
www.joinindianarmy. nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த கடலூர்,
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன்
பிரதேசத்தில் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த, திருமணம் ஆகாத ஆடவர்களிடமிருந்து அக்னி
வீரர் பொதுப்பணி, அக்னி வீரர் தொழில்நுட்பம், அக்னி வீரர் குமாஸ்தா, ஸ்டோர்கீப்பர்
தொழில்நுட்பம், அக்னி வீரர் ட்ரேட்ஸ்மேன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் மட்டுமே
விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் மாதம் 17ம் தேதியில் இருந்து நடைபெறவுள்ள ஆன்லைன்
எழுத்துத் தேர்வுக்கு நுழைவு அட்டைகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள்

www.joinindianarmy. nic.in தளத்தை தொடர்ந்து கவனித்து வர வேண்டும். மின்னஞ்சல்
முகவரியையும் அளிக்கலாம். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள சென்னை, செயின்ட்ஜார்ஜ்
கோட்டை வளாகத்தில் உள்ள பணி நியமன அலுவலக தொலைபேசி எண். 044 25674924 என்ற
எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். பணிநியமன நடைமுறை முற்றிலும் தானியங்கி வழியில்
நியாயமான, வெளிப்படையான முறையில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் போலி முகவரிகள்,
மோசடிப்பேர்வழிகளை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். கடின
உழைப்பும், முன் தயாரிப்பும், தகுதி அடிப்படையில் தேர்வை உறுதி செய்யும். போலி
முகவர்களுக்கு இதில் எந்தப்பங்கும் இல்லாததால் அவர்களை நம்ப வேண்டாம் என
விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top