ஸ்டாலினின் பேரன் வயது கொண்டதேஜஸ்வி யாதவ், தன்னை புகழ்ந்ததை எல்லாம், நினைத்து புலகாங்கீதம் அடையும் அளவுக்கு ஸ்டாலினின் அரசியல் தரம் தாழ்ந்து விட்டது
சென்னை விமான நிலையம் வருகை தந்த பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள் திமுக ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக ஸ்டாலின் கூறியது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தலைவர் அண்ணாமலை, மு.க ஸ்டாலின் சரியாக தூங்காத காரணத்தினால் தான், இதுபோன்று பிதற்றிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஆறு மாதங்களுக்கு முன்னாள் ஒரு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளால் தூக்கம் இல்லாமல் தவிப்பதாக கூறியதை சுட்டிக்காட்டினார். மேலும் திமுக நிர்வாகிகள் முதலமைச்சரை தூங்க விடுங்கள் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு அரசியலில் ஜாதியை கலந்த பெருமை, பிரிவினையை கலந்த பெருமைக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர் என விமர்சித்த அண்ணாமலை, புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து உண்மையை பேசினால் புலம்புகிறார்கள் எனவும் தெரிவித்தார். 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது அருண் ஜேட்லியையும் சுஷ்மா சுவராஜையும் பிரதமர் மோடி கொன்றதாக ஸ்டாலின் மகன் உதயநிதி பேசியதை சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறு கேவலமாக வதந்தி பரப்பியவரை கேபினட் அமைச்சராக அமரவைத்து விட்டு, தமிழ்நாடு அமைதி பூங்காவாக இல்லை என்று உண்மையை நான் சொன்னால் என் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் வட இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றதை விமர்சித்த அவர், தந்தையின் தயவால் துணை முதலமைச்சரான ஸ்டாலினின் பேரன் வயது கொண்டதேஜஸ்வி யாதவ், தன்னை புகழ்ந்ததை எல்லாம், நினைத்து புலகாங்கீதம் அடையும் அளவுக்கு ஸ்டாலினின் அரசியல் தரம் தாழ்ந்து விட்டது எனவும் அவர் தெரிவித்தார்.பரூக் அப்துல்லா, தேஜஸ்வி போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் வந்து ஸ்டாலின் பெரியவர் என்று சொன்னால், அதற்காக பாஜக ஒரு போதும் பயப்படாது எனவும் அவர் கூறினார்.
.