சமீபத்தில் தமிழ்நாடு பாஜக ஐ.டி பிரிவில் இருந்து சிலர் விலகினர். அதனால் பாஜக பலமிழந்து போயிற்று, ஐடி பிரிவு அஸ்தமனமானது என்று குஷிப்பட்டு குதிகால் தரையில் படாமல் குதித்தவர்களுக்கு
அடித்தது ஷாக் அதை பார்க்கலாமா …
தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்ட 10 மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்க பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நேற்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். அவரை வரவேற்றும், 10 அலுவலகங்களை தமிழ்நாடு பாஜகவுக்கு வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தும் நன்றி நட்டா என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது போலவே டிவிட்டரில் மற்ற ஹேஷ்டேக்குகளை பின்னுக்கு தள்ளி இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டானது. தலைவர் அண்ணாமலை நண்பகல் விழா மேடையில் பேசும் போது 2 லட்சம் ஹேஷ்டேக்குகளுக்கு மேல் டிவிட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நண்பகலை தாண்டி நேற்றிரவு வரை 3 லட்சம் பேர் நன்றி நட்டா என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் டிரெண்ட் செய்தனர். மேலும் இன்று காலையும் நன்றி நட்டா ஹேஷ்டேக்கில் டிவிட்டுகள் தொடர்ந்து செய்யப்பட்டு கொண்டே இருந்தன. இவ்வாறு இந்திய அளவில் டிரெண்ட்டாகி தமிழ்நாடு பாஜக டிவிட்டரில் தனது பலத்தை நிரூபித்து காட்டியது
இது ஒருபுறம் என்றால் மறுபுறம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது பொய் வழக்கு போட்ட திமுகவினரை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரே நாளில் பாஜக அலுவலக திறப்பு நிகழ்ச்சி மற்றும் வள்ளுர்வர் கோட்டத்தில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தலைவர் அண்ணாமலை உள்பட பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் கிருஷ்ணகிரிக்கு சென்றுவிட்டனர். மேலும் அங்கு பொதுக்கூட்டம் ஒன்று தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அதில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கரு.நாகராஜன், குஷ்பு உள்ளிட்ட ஒரு சில முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், ஆயிரக்கணக்கான பாஜகவினர் கூட்டத்தில் கலந்து கொண்டு திமுகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையிலான பாஜவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது, காவல்துறையினர் மற்றும் எதிர்கட்சிகளை புருவம் உயர்த்த வைத்தது.
ஒரு சில பகுதிகளில் இருந்து பாஜகவினர் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். வள்ளுவர்கோட்டம் முழுவதையும் பாஜக தொண்டர்கள் ஆக்கிரமித்திருந்தது கட்சியின் வளர்ச்சி அதிவேகத்தில் இருப்பதை கண்முன் நிறுத்தியது. இவ்வாறு நேற்று ஒரே நாளில் இணையத்திலும்,களத்திலும் நாங்கள் தான் ஹீரோ மற்றவர்கள் ஜீரோ என்பதை பாஜக நிர்வாகிகள் நிரூபித்து காட்டினர்.