டிஜிட்டல் மயமாகி வரும் இந்தியாவின் வளர்ச்சியை, உலக நாடுகள் திரும்பி பார்க்கின்றன என தென்காசியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பேசினார்.
தென்காசியில் நடந்த ஸ்டார்ட் அப் தென்காசி நிகழ்ச்சியில், மத்திய மின்னணு தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திர சேகர், காணொலி மூலம் பேசியதாவது:
“கிராமங்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சியாகும். நகரங்களை வளமாக்குவது மிகவும் எளிது. அதே நேரத்தில், கிராமங்களை வளமாக்குவதுதான் மிகவும் கடினமாகும்.
அந்த கிராமங்களை தேர்ந்தெடுத்து, முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டுள்ளார். இந்தியா அனைத்து துறைகளிலும் படிப்படியாக முன்னேறி வருகிறது. தற்போது அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. இதனால் உலக நாடுகளே, இந்தியாவை திரும்பி பார்க்கின்றன.அறிவியல், தொழில்நுட்பத்தில் இந்தியா அபார வளர்ச்சியை பெற்றுள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தென்காசியை போன்ற சிறிய நகரங்களில் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சி நடத்தப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொழில் வளம் அதிகம் இருந்தாலும், தொழில் துவங்க பெரும் பாலானோர் முன்வருவதில்லை. தொழில் துவங்க ஆர்வமாக இருப்பவர்களை, தொழில் முனைவோராக்க வேண்டும் என்ற நோக்கி இந்த நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.
தென்காசியில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை அனைவரும் பய னுள்ளதாக்கி கொள்ள வேண்டும். தற்போது உலகமே டிஜிட்டல் மயமாகி வருகிறது. இந்த டிஜிட்டல் உலகில், இந்தியா தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறது.
பெரும்பாலான துறைகள் டிஜிட்டல் மயமாகி விட்டது. இந்த டிஜிட்டல் யுகத்தில், சாமானிய மக்களும் பயணிக்கும் வகையிலான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பேசினார்.