சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வதிலேயே தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டுகிறதே தவிர, பெண்கள் குழந்தைகள் மீது வன்மத்தை கக்குபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
சமூக வலைதளங்களில் கருத்து போட்டால் மீம்ஸ் போட்டவர்களை கைது செய்ய காவல்துறை இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது.
சமூகவலைதளங்களில் போடும் சாதாரண கருத்துக்கள் கூட மு.க ஸ்டாலினை முள் போன்று குத்துகிறது. 19வயது சிறுவனை கைது செய்வதெல்லாம் முதலமைச்சர் எந்த அளவுக்கு பெருந்தன்மை உடையவர் என்பதை காட்டுவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொலை கொள்ளை, ஆணவப் படுகொலை அதிகரித்துள்ளது என்றும் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் சாராய அமைச்சரும், சாராய அமைச்சர்களை சேர்ந்தவர்களும் தான் ஒரு ரூபாயாவது லஞ்சம் வாங்கியதை நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்
அரசியலில் நிரந்தரமான எதிரியும் கிடையாது, நிரந்தரமான நண்பனும் கிடையாது எனவும் கூறினார். ஒரு தனிமனிதனான தன் மீது இவ்வளவு பெரிய தாக்குதல் நடத்தப்படுகிறது என்றால் அவர்களின் கட்டமைப்பு மீது எத்தகைய தாக்குதலை நான் ஏற்படுத்தியுள்ளேன் என்பது தெரிகிறது எனவும் குறிப்பிட்டார்
மேலும் திராவிட மாடல் தன்னுடைய முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி தன் மீதான, ஏதாவது ஒரு லஞ்சம் , ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்கப்பட்டும். 9 வருடங்கள் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த போது ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை என தெரிவித்தார்.
அரசியலை பொறுத்தவரை நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தமான எதிரிகள் யாரும் இல்லை எனவும் அவர் கூறினார்.