திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் பற்றி பேசுவதற்கு திமுவக்கு அருகதை இல்லை என்று அக்கட்சியை சேர்ந்தவரும் தென்காசி மாவட்ட பெண் ஊராட்சி மன்றத் தலைவி தமிழ்ச்செல்வி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தென்காசியில் திமுக சார்பில் மகளிர் அணியினர் மணிப்பூர் பிரச்சனைக்கு ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி நிர்வாகிகள் பேசுகின்ற வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாநில மகளிரணி நிர்வாகி முத்து செல்வியிடம் மைக் வழங்கப்பட்டது. அப்போது திடீரென மேடையில் நின்று கொண்டிருந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, ஆவேசமாக ‘‘எனக்கே பாதுகாப்பில்லை.. மணிப்பூரை பற்றி பேசுகிறார்கள்.. மைக்கை என்னிடம் கொடுங்கள் நான் பேச வேண்டும்’’ என, மைக்கை வலுக்கட்டாயமாக பிடுங்கினார்.
அப்போது திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், ‘‘நமக்குள் இருப்பதை பேசி தீர்த்துக்கொள்வோம்’ என கூறினார். இதற்கிடையில் மேடையின் கீழ் இருந்த இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாரியப்பன் என்பவர் மைக்கை மாநில நிர்வாகியிடம் வழங்குமாறு தெரிவித்தார். அவரை பார்த்து தமிழ்ச்செல்வி ஆவேசமாக பேசினார். மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என்னை பற்றி சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்கள் பகிரப்பட்டன. அது போன்று தவறான கருத்துக்களை பதிவிட்டவர்களை தட்டி கேட்காத நிர்வாகிகள் மணிப்பூர் பற்றி பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது என ஆவேசமாக கத்தினார்.
அங்கு கூடியிருந்தவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. மேலும் தமிழ்ச்செல்வியிடம் இருந்து வலுக்கட்டாயமாக மைக் வாங்கும் முயற்சியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது மேடையில் இருந்த தமிழ்ச்செல்வியை போலீசார் அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இதற்கிடையில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம் ஒன்றை தமிழ்ச்செல்வி எழுதினார். அவரது கடிதம் தற்போது இணையத்தில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
பெண்களுக்கு தாங்கள்தான் பாதுகாப்பு என்பதை போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை திமுகவினர் கட்டமைத்துள்ளனர். இது பற்றி திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காத்து வருகின்றார். விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் கூட எந்த கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-வ.தங்கவேல்