பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று 85வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்களின் 85ஆவது பிறந்த தினமாகிய இன்று தமிழக பா.ஜ.க. சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில், சமூக நீதிக்கான நெடிய போராட்ட வரலாறு கொண்ட ஐயா ராமதாஸ் அவர்கள், நீண்ட ஆயுளுடன், இன்னும் பல ஆண்டுகள் மக்கள் பணியைத் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.