புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையின்போது, முதலமைச்சர் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி உள்ளிட்டோரின் பெயரில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சங்கப்ப அர்ச்சனை செய்து பூமி பூஜையை துவக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம் பொன்னக்குப்பம் ஊராட்சியில் இரண்டு இடங்களில் புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜைக்கான விழா நேற்றைய தினம் (ஜூலை 24) நடைபெற்றது.
அதனை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூமி பூஜையை போட்டு தொடங்கி வைத்தார். அவரும் மற்றவர்களும் குருக்கள் அணிவித்த மாளிகை அணிந்து கொண்டு பூமி பூஜையில் கலந்து கொண்டார். அந்த சமயத்தில் அமைச்சர் மஸ்தான், முதலமைச்சர் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோரின் பெயர்களிலும், தனது பெயர் மற்றும் நட்சத்திரத்தையும் குறிப்பிட்டு பூஜையை தொடங்கி வைத்தார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தி.மு.க.வினர் எப்போதும் பகுத்தறிவு, கடவுள் மறுப்பு போன்றவற்றை மக்கள் மத்தியில் பேசி வருவது வழக்கம். ஆனால் தற்போது இந்துக்கள் அனைவரிடம் விழிப்புணர்வு ஏற்பட்ருவிட்டதால் தி.மு.க.வுக்கு விழுகின்ற வாக்குகளும் விழாமல் போய்விடும் என்ற அச்சத்தில் முஸ்லீம் நபராக செஞ்சி மஸ்தான் கூட இந்து முறையை கடைப்பிடிக்கலாம் என்ற சிந்தனைக்கு வந்துள்ளதாகவே தெரிகிறது. குறிப்பாக அவர் தனது ராமு, நட்சத்திரத்தை கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது!
-வ.தங்கவேல்