திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தாமரை கோலம் போடவிடாமல் தடுத்து, கோவில் மேலாளர் தமிழ்ச்செல்வி அவமானப்படுத்தியதற்கு விஸ்வ இந்து பிரஷத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியால் பல்வேறு வகையில் தடுப்புகளை போடலாம் என்று விடியா திமுக அரசு நினைக்கிறது. அதற்கு சிறுபிள்ளைத்தனமான செயல்களில் அடிக்கடி செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அது போன்ற சம்பவம்தான் தற்போது திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்துள்ளது. கோவிலில் பெண்கள் கோலம் போடுவது வழக்கம். அதே போன்று கடந்த 27ம் தேதி ஸ்தலஸ்தார் குடும்பத்தை சேர்ந்த ஹரிப்ரியா என்பவர் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அவர் போட்டது தாமரை கோலம் என்பதால், தடுக்கப்பட்டுள்ளார்.
போடப்பட்ட தாமரை கோலம் அழிக்கப்பட்டிருக்கிறது. இது, அராஜக செயல் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது பற்றி பாதிக்கப்பட்ட ஹரிப்ரியா கூறும்போது, ரங்கநாதருக்கு கைங்கர்யம் செய்வது தான், எங்கள் குடும்ப பணி, அதற்கு சன்மானம் கிடையாது. கோவிலுக்கு பெண்கள் தினமும் சென்று கோலம் போடுவது வழக்கம். அப்படிதான் ராமானுஜர் சன்னிதி முன்பாகவும் கோலம் போட்டோம். தினமும் மாற்றி, மாற்றி கோலம் போடுவது வழக்கம்.
இந்த முறை யசேச்சையாக தாமரை வடிவ கோலம் போட்டோம். இதை பார்த்ததும் கோவில் மேலாளர் தமிழ்ச்செல்வி, கோவிலுக்குள் தாமரை வடிவில் கோலம் போடக் கூடாது என்று கூறி அழித்துவிட்டார். எங்களையும் அங்கிருந்து விரட்டினார். தொடர்ந்து கோலங்கள் போடாதவாறு தடுப்புகளை அமைத்துவிட்டனர். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால், பாஜக சின்னம் தாமரை. எனவே அதனை கோவில் உள்ளே கொண்டுவரக் கூடாது என்று அரசியல் பேசினார்.
எங்களை பொறுத்தவரையில் அரசியல் எதுவும் தெரியாது. அரசியல் நோக்கமும் கிடையாது. இறைவனுக்கு சேவை செய்ய வந்த இடத்தில் இப்படி ஒரு சோதனை என்பதே எங்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
திமுக ஆட்சியில் கோலம் போடுவதற்கு கூட தடை ஏற்படுத்துவது வேடிக்கையாக உள்ளது. தினமும் சூரியன் உதிக்கிறது, திமுகவின் சின்னமாக கூட உள்ளது. அதனை மறைப்பார்களா? இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்பாட்டில் ஈடுபடும் விடியல் அரசுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள்.
-வ.தங்கவேல்