மஹாபாரதத்தை ‘லவ் ஜிகாத்’துடன் ஒப்பிட்டு பேசிய அசாம் மாநில காங்., தலைவர் பூரேன் போரா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அசாமில் 3 பேர் கொலை செய்யப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த சர்மா, இது லவ் ஜிகாத்தால் நடைபெற்ற கொலை என்றார்.
பிற மதங்களை சேர்ந்த பெண்களை முஸ்லீம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்வதுதான் ‘லவ் ஜிகாத்’ என சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முதலமைச்சர் சர்மாவின் பேச்சுக்கு பதில் கொடுப்பதாக நினைத்து அசாம் மாநில காங்., தலைவர் பூபேன் போரா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் பேசியதாவது: காதலுக்காக சண்டை போடுவது காலம், காலமாக நடப்பவை. மஹாபாரதத்திலேயே லவ் ஜிகாத் நடந்துள்ளது. பகவான் கிருஷ்ணர், ருக்மினியை திருமணம் செய்ததும் லவ் ஜிகாத் தான். எனவே, மதம் மாறி திருமணம் செய்வதை முதலமைச்சர் விமர்சனம் செய்யக் கூடாது. இது போன்ற சர்ச்சையான கருத்தை பேசியவதற்கு அம்மாநிலத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.
இதனிடையே பூபேன் போரா மீது யாராவது புகார் அளித்தார்கள் என்றால், அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருந்தார். இதனால் பயந்துபோன பூபேன் போரா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று (ஜூலை 28) கூறியதாவது: எனது பேச்சு, அசாம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக நான் உணர்கிறேன். எனது தாத்தா, கனவில் வந்து இதை கூறினார். எனவே நான் பேசியதற்காக கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு மன்னிப்பு கேட்பதாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
சமீபகாலமாக காங்., கட்சியை சேர்ந்தவர்கள் இந்து கடவுள்களை பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர். எதற்காக விமர்சனம் செய்கின்றார்கள் என்றால் முஸ்லீம் வாக்குகளை பெறவே இது போன்ற சர்ச்சையான கருத்தை பேசி வருகிறார்களோ என தோன்றுகிறது. வாக்கு அரசியலுக்காக முஸ்லீம்கள் மீது பாசம் இருப்பதை போன்று காங்., காட்டிக்கொள்வது ஒன்றும் புதிதல்ல.
-வ.தங்கவேல்