புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை திமுக காவல்துறை கைது செய்துள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழக காவல்துறையின் பணியா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.