நாட்டில் ஊழல் மிகுந்த ஒரு அரசு என்றால் அது திமுக அரசு மட்டுமே என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை தொடக்க விழாவில் பேசினார். முன்னதாக தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பிரதமர் மோடி என்ன செய்தார் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
இது பற்றி அவர் ஆற்றிய சிறப்புரை: ஊழல் மிகுந்த திமுக அரசை விடுவிப்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார்.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்தவே அண்ணாமலை யாத்திரை மேற்கொள்வதாகவும் அமித்ஷா பேசினார். அத்துடன், ஊழல்வாதிகளை ஒழித்து, ஏழை மக்களின் நலத்தை காக்கும் நோக்கில் ஓர் அரசை உருவாக்க செய்யப்படும் யாத்திரை இது.
தமிழ்நாட்டில் உள்ள அரசாங்கம் நாட்டிலே ஊழல் மிகுந்த அரசாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டிய அமித் ஷா, இந்த ஆட்சி ஊழல்வாதிகளின் அரசாக உள்ளது. மேலும், ஊழல் வழக்கில் சிறை சென்றுள்ள செந்தில்பாலாஜியை இன்னும் அமைச்சரவையில் வைத்திருப்பது வெட்கக்கேடு எனவும், அவர் ராஜினாமா செய்தால், அனைத்து ரகசியங்களையும் வெளியில் சொல்லிவிடுவார் என திமுக அரசு அஞ்சுவதாகவும் விமர்சித்தார்.
மேலும் அண்ணாமலை ஒரு டிவிட் போட்டாலே, திமுக அரசு பூகம்பம் ஏற்பட்டுவிட்டதை போன்று நடுங்குவதாக கூறிய அமித்ஷா, இந்தியா கூட்டணியினர் வாக்கு கேட்டு சென்றால், அவர்களின் ஊழல் மட்டுமே மக்களுக்கு நினைவு வரும். அக்கூட்டணியில் உள்ளவர்கள் தங்கள் வாரிசுகளை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு ஆசைப்படுகின்றனர்.
தமிழர்களின் பெருமையை உயர்த்திய பிரதமர் மோடி:
ஐ.நா. அவையில் தமிழர்களின் பெருமையை பிரதமர் மோடி பேசினார். நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது, காசி தமிழ் சங்கமம் உள்ளிட்டவற்றை நினைவு கூர்ந்தார். மேலும், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களையும் அமித்ஷா பட்டியலிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
-வ.தங்கவேல்