100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் மோசடிக்கு மத்திய அரசு செக்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் ஊதியம் அளிக்கப்படுவதை உறுதி செய்யவும், பயனாளிகளின் வங்கிக் கணக்கு எண்கள் அடிக்கடி மாற்றப்படுவதாலும், திட்ட அலுவலர்களால் புதுப்பிக்கப்படாததாலும் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், வங்கிக் கணக்கு மாற்றத்தால் பாதிக்கப்படாத ஆதார் அடிப்படை கட்டண முறையை பின்பற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையான பயனாளிகள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, தற்போதுள்ள பயனாளிகளின் நகல் நீக்கம் செய்யப்பட வேண்டும். இதற்கு, ஆதார் அடிப்படை கட்டண முறை சிறந்த மாற்றாகும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பிப்ரவரி 1 முதல் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், பல மாநிலங்கள் விடுத்த வேண்டுகோளின்படி, ஆகஸ்ட் 31ம் தேதி வரை மாநில அரசுகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு செயலி மூலம் ஒரு நாளைக்கு தொழிலாளர்களின் வருகையை ஜியோ-டேக் செய்யப்பட்ட, இரண்டு நேர முத்திரையிடப்பட்ட புகைப்படங்களுடன் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது திட்டத்தின் மீதான குடிமக்களின் கண்காணிப்பை அதிகரிப்பதோடு, பணம் செலுத்துவதை விரைந்து செயல்படுத்த உதவுகிறது. என்.எம்.எம்.எஸ் செயலி மூலம் தொழிலாளர்களின் ஜியோ-டேக் செய்யப்பட்ட புகைப்படங்களுடன் வருகையை பதிவு செய்வது பணியிட மேற்பார்வையாளர்களின் பொறுப்பாகும்.

வருகைப்பதிவு மற்றும் முதல் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த 4 மணி நேரத்திற்குப் பின்னர் 2வது புகைப்படத்தை எடுக்க என்.எம்.எம்.எஸ் செயலி மாற்றப்பட்டுள்ளது. முதல் புகைப்படம் மற்றும் இரண்டாவது புகைப்படத்துடன் காலை வருகையை நெட்வொர்க் இல்லாமல் பதிவு செய்யலாம். சாதனம் ஒரு நெட்வொர்க்கிற்குள் வந்தவுடன் பதிவேற்றலாம். அசாதாரண சூழ்நிலை காரணமாக வருகையை பதிவேற்றம் செய்ய முடியாத பட்சத்தில், கையேடு வருகையை பதிவேற்றம் செய்ய மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top