மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பதில், காயம்பட்டவர்கள் புண்களில் உப்பைத் தடவுகிறார் ராகுல் காந்தி என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர்- அனுராக் தாக்கூர் விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பற்றிய விவாதத்தின் போது சிரித்துக் கொண்டிருந்தார் என்று ராகுல் காந்தி பொய் குற்றச் சாட்டு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர், அனுராக் தாகூர், ” மணிப்பூரில் வெறுப்பை விதைத்தது காங்கிரஸ் தான். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலும் குண்டு வெடிப்புகளும் போராட்டங்களுமே நடந்தன. ராகுல் காந்திக்கு மணிப்பூர் பெண்களை பற்றி எந்தக் கவலையும் இல்லை.
மிகச் சிறிய குழுவினரின் ஆதரவை பெற்றவர்களே நாட்டை பிரிப்பது பற்றியும் பாரத மாதா கொல்லப்படுவதாகவும் யோசிக்கின்றனர். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பதில், காயம்பட்டவர்கள் புண்களில் உப்பைத் தடவுகிறார் ராகுல் காந்தி. அவருக்கு காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் பெண்கள் பற்றி கவலை இல்லை,
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது”, என்று கூறினார்.