‘அலங்கார வார்த்தைகளால் மக்களை ஏமாற்றுவதை, தி.மு.க., எப்போது நிறுத்தும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு, மாநில அரசின் ஸ்டிக்கர்களை ஒட்டி, பெயர் மாற்றம் செய்து ஏமாற்றும் திராவிட மாடர்ன் அரசு, தற்போது ” ஊட்டச்சத்தை உறுதி செய் ” என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறது. இதை விமர்சித்து, பாஜக தலைவர் அண்ணாமலை, வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை ஏமாற்றுவதை திமுக அரசு எப்போது நிறுத்தும் எனக் கேள்வி கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: முதலமைச்சர் ஸ்டாலின், ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். குழந்தைகளுக்கான ஊட்ட சத்தை உறுதி செய்ய வேண்டுமானால், ஏழு ஆண்டுகளாக செயல்படுத்தி வரும், ‘போஷான் அபியான்’ திட்ட நிதியை ஒழுங்காக பயன்படுத்தினாலே போதும்.
புதியதாக பெயர் வைப்பதால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடாது என்பதை, முதலமைச்சர் உணர வேண்டும். பிரதமரின் போஷான் அபியான் திட்டம் வாயிலாக, ஏழு ஆண்டுகளில் தமிழத்திற்கு, 2,936 கோடி ரூபாய் வந்துள்ளது. ஆண்டுக்கு, 50 லட்சம் குழந்தைகள், இந்த திட்டத்தின் வாயிலாக பலன் அடைகின்றனர்.
ஒருபுறம் பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை உட்பட தரமற்ற உணவு வழங்கி, மற்றொரு புறம் அலங்கார வார்த்தைகளால், மக்களை ஏமாற்றுவதை திமுக எப்போது நிறுத்தும். இவ்வாறு அவர் தனது அந்த அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளார்.