கும்பகோணத்தில் கொடியை ஏற்றும் போது தேசிய கொடி கீழே விழுந்ததால், கோபத்தில் அருகில் நின்ற விழாவை ஏற்பாடு செய்த முதியவரை திமுக எம்.எல்.ஏ., அன்பழகன் அடிக்க பாயும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், போர்ட்டர் டவுன் ஹாலில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொடியேற்றும் நிகழ்வு நடந்தது. அந்த விழாவில் கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன் மற்றும் என்.சி.சி பட்டாலியன் கர்னல் சந்திரசேகரன் ஆகிய இருவரும் இணைந்து தேசிய கொடியை ஏற்றினர்.
அப்போது மேலே ஏற்றப்பட்ட தேசிய கொடி, கயிற்றில் சரியாக கட்டாமல் விட்டதால் திடீரென்று கீழே விழுந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் பதட்டம் அடைந்தனர். அப்போது, எம்.எல்.ஏ., அன்பழகன் தனது அருகில் நின்ற விழா ஏற்பாட்டாளரை அடிக்க கையை ஓங்கியது மட்டுமின்றி திட்டவும் செய்தார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்கள் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
பெரியவர்கள் மீது போலி மரியாதை, தேசியக் கொடி மீது போலி மரியாதை…இது தானே திமுக என்று அருகில் இருந்தவர்கள் கமெண்ட் அடித்துள்ளனராம் !