நாலரை வருஷமா எங்க போனிங்க: காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை ஓடவிட்ட மக்கள்!

கடந்த நாலரை ஆண்டுகளாக எங்கள் கிராமத்தை எட்டிக்கூட பார்க்காமல் இருந்துவிட்டு, இப்ப மட்டும் எதற்கு வந்திருக்கிறீர்கள் என கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியிடம் வாக்காளர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் மீண்டும் ஓட்டுக்காக மட்டும் ஊருக்கு வந்திருக்கீங்க, அப்படித்தானே என ஜோதிமணியிடம் வாக்காளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அவரது கேள்வி சரிதான் என கிராம மக்களும் குரல் கொடுத்தனர்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யாக கடந்த 2019ம் ஆண்டு முதல் ஜோதிமணி இருந்து வருகிறார். இவர் தேர்தல் நேரத்தில் மட்டுமே தொகுதியில் உள்ள அனைத்து கிராமத்திற்கும் சென்று வாக்கு சேகரித்தார். ஆனால் வெற்றி பெற்ற பின்னர் டெல்லிக்கு சென்றவர், மீண்டும் தொகுதி மக்களின் நலனுக்காக எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை அத்தொகுதி மக்கள் முன்வைக்கின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்கு சுற்றுப்பயணம் சென்ற ஜோதிமணிக்கு அங்கு அவர் எதிர்பார்க்காத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. கிராம மக்களை சந்தித்துவிட்டு புறப்படவிருந்த ஜோதிமணியிடம், வாக்காளர் ஒருவர் நாலரை வருஷமா ஏன் நீங்க எங்க ஊருக்கு வரல. நன்றி சொல்லக் கூட வராத நீங்க இப்ப எதுக்கு வர்ரீங்க என கேள்வி எழுப்பினார்.

இதனால் டென்ஷனான ஜோதிமணி எம்.பி. 6,000 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தாம் நன்றி சொல்ல சென்றிருப்பதாகவும் பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்திருக்கும் உங்களுக்கு பதிலளிக்க முடியாது எனவும் கூறிவிட்டு நடையை கட்டினார். இருப்பினும் அந்த வாக்காளர் விடுவதாக இல்லை, தேர்தல் வரவுள்ளதால் ஓட்டுக்காக இப்ப மட்டும் நாங்கள் தெரிகிறோமா எனக் கேட்க அந்த இடம் மேலும் பரபரப்பானது.

இதையடுத்து காவல்துறையினர் சமாதானப்படுத்தி கேள்வி எழுப்பிய நபரையும், காங்கிரஸ் கட்சியினரையும் அனுப்பி வைத்தனர். மக்கள் மிகவும் விழிப்புணர்வாக இருப்பதால் தமிழகத்தில் உள்ள பல தொகுதிகளிலும் சிட்டிங் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்களின் நிலை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top