சேலத்தில் சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தியிருந்த வியாபாரியை, திமுக பிரமுகர் கன்னத்தில் அறைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சேலம் மாநகர், அம்மாபேட்டையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வெள்ளி பட்டறை வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கண்ணன் அருகில் சென்றிருந்த போது, அந்த வழியாக காரில் வந்த திமுக பிரமுகர் ராஜா, கண்ணனின் இருசக்கர வாகனத்தையும் இடிப்பது போல் வந்துவிட்டு, வண்டியை ஓரமாக நிறுத்த மாட்டியா என்று தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.
இதனை பார்த்த கண்ணன், தனது தலையில் அடித்துக்கொண்டே விரக்தி அடைந்துள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கி வந்த திமுக பிரமுகர் ராஜா, கண்ணனை பளார் என்று கன்னத்தில் அறைந்துள்ளார். ஏன் அடிக்கிறாய் என்று கேட்டதற்கு நான் அப்படிதான் அடிப்பேன் என தெனாவட்டாக ராஜா கூறியுள்ளார். இந்த சம்பவம் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திமுக ஆட்சி நடைபெறுவதால், அந்த கட்சியை சேர்ந்தவர்கள் அனைவரும் தங்களை ராஜாவாக நினைத்துக்கொண்டு ஆண்டான் அடிமை மானப்போக்கில் செயல்படுகின்றனர். . மக்கள் வருகின்ற தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள்.