அண்ணாமலை தான் அடுத்த முதல்வர்: போலீஸ்காரர் ராஜினாமா அறிவிப்பு!

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையின் அரசியல் பயணத்தால் கவரப்பட்ட, காவலர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பின்னர் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அதிகளவில் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அதே போன்று வயதானவர்களும் அண்ணாமலையை அதிகளவு நேசிக்கின்றனர். அந்த வகையில் அரசு ஊழியர்களும் இணைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் கார்த்திக். இவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ‘நாடு சுதந்திரம் பெற்று, 77 ஆண்டுகள் ஆகிறது. எனினும், இந்த சமூகத்தில் சுதந்திரம் இருக்கிறதா? அதுபற்றி ஆராய்ச்சி செய்யப்போகிறேன். அதற்காக என் உயிர் மூச்சாக கருதும் காவலர் பணியை ராஜினாமா செய்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவரது பேச்சுக்கு சமூக வலைதளத்தில் பலர் ஆதரவு தெரிவித்தனர். சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். சமூகத்தில் சுதந்திரம் இல்லை என்பதற்காக, அரசு பணியை துறக்கலாமா, அதற்கு இது தீர்வாகுமா என கேள்விகளும் ஒருபுறம் எழுந்தது.

இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில், கார்த்திக் கூறியதாவது: சமூகத்தில் சுதந்திரம் இல்லை என்பதால் என் பணியை ராஜினாமா செய்யும் முடிவில் மாற்றம் இல்லை. ராஜினாமா கடிதத்தை, ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்துள்ளேன். பரிசீலனையில் உள்ளது.

தமிழகத்தில், பூரண சுதந்திரத்திற்கான மாற்றம், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையால் தான் நிகழும். அவர் தான் அடுத்த முதலமைச்சர். அவரது அரசியல் பயணத்தால் ஈர்க்கப்பட்டு, இந்த முடிவை எடுத்துள்ளேன். அவரும் காவல் பணியில் இருந்து அரசியலுக்கு வந்தவர். அவரை பின்பற்றுவதை பெருமையாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top