கரூர் மாவட்டம், கடவூரில் நல்ல நிலையில் இருந்த தடுப்பணைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து, கருங்கற்களைத் திமுக கவுன்சிலரின் கணவர் தனது பண்ணை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள தரகம்பட்டி, கீழப்பகுதி கிராமத்தில் குளத்திற்கு மழைநீர் செல்லும் வகையில் கால்வாயில் கடந்த 10 ஆண்டுக்கு முன் 10 லட்சம் ரூபாய் செலவில் 3 தடுப்பணைகள் கட்டப்பட்டன.
இந்த கிராமம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. அங்கு கவுன்சிலராக திமுகவை சேர்ந்த கோமதி உள்ளார். அவரது கணவர் பிரபாகரன் பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அவர் நல்ல முறையில் இருந்த . 3 தடுப்பணைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் ப இடித்து, அதில் இருந்த கருங்கல்லை அவரது பண்ணை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இது பற்றி சமூக வலைதளங்களில் தகவல் பரவியுள்ளது. இந்த சம்பவத்தை மறைப்பதற்காக கடவூர் ஊராட்சி ஒன்றிய தலைவரான திமுகவை சேர்ந்த செல்வராஜ் உதவி செய்துள்ளார்.
அதாவது இடித்து கற்கள் எடுக்கப்பட்ட 3 இடங்களிலும் மீண்டும் தடுப்பணை கட்டுவதற்கான பணி அவசர, அவசரமாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இது போன்று பல பெண் கவுன்சிலரின் கணவர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை ஆற்று மணல்களைத் தான் கடத்தி வந்தனர். தற்போது கட்டிடங்ககளை இடித்து கருங்கட்களையும் இடித்துக் கடத்தத் துவங்கிவிட்டனர். இன்னும் என்ன கடத்தப்படுமோ ?