தி க தலைவர் வீரமணி
பாரம்பரிய கலைஞர்கள் அழிய வேண்டும் என்று நினைக்கிறாரோ என சந்தேகம் எழுப்பி உள்ளார் பாஜகவின் மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர்.
திக தலைவர் வீரமணி விடுதலை பத்திரிக்கையில், பிரதமர் அறிவித்த விஸ்வகர்மா திட்டத்தை பற்றி, குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாக ஆதங்கத்துடன் எழுதி இருந்ததற்கு எஸ் ஆர் சேகர் பதில் அளித்துள்ளார். அதில் அவர்,
பிரதமர் அறிவித்த விஸ்வகர்மா திட்டத்தை பற்றி, குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாக ஆதங்கத்துடன் விடுதலைப் பத்திரிகையில் வீரமணி எழுதி இருந்ததை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது !!!
அவரவர் குல தொழிலை கிராமங்களிலும் நகரங்களிலும் செய்வதற்கு நிதி மானியம் என்று தூண்டில் போடப்பட்டதாக எழுதி இருந்தார் !
அவருக்கு ஒரு சின்ன நினைவூட்டல் !!
“Poompuhar takes pride and responsibility of keeping our tradition and culture live by encouraging the traditional craftsperson and passing the craft making knowledge and workmanship technique to the next generation by giving training programs and various welfare schemes and awards to them”
அதாவது கை விணை கலைஞர்களின் திறனை மேம்படுத்துவதில், மற்றும் அவர்களது அறிவை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் பெருமை கொள்கிறோம் !!
‘மேற்கண்ட வாக்கியம் மோடி எழுதியது இல்லை !!
தமிழக கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது !!
நாங்கள் ஒன்றும் UNESCO விருது போல போகிற போக்கில் பொய் பிரச்சாரம் செய்பவர்கள் இல்லை என்பதால் கீழே அதற்கான லிங்க்கும் கொடுக்கிறோம் !
அதுவும் தமிழக கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழகம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது தெரியுமா ?
எந்த ராஜாஜியை குலக்கல்வியை அறிமுகப்படுத்தியதாக வசைபாடுகிறார்களோ …. எந்த ராஜாஜி காலில் விழுந்து வானவில் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார்களோ …
அந்த ராஜாஜி இறந்த அடுத்த வருடமே, அதாவது 1973 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது !!
இதுநாள் வரை பாரம்பரிய கைவினை கலைஞர்களை / கலாச்சாரத்தை போற்றி வருகிறோம் என்று சொன்னதெல்லாம் பொய்யா ??
தமிழகத்தில் செய்தால் அது கலாச்சார பாதுகாப்பு !! இந்திய அளவில் செய்தால் அது குல கல்வி ??
எதற்கு இந்த இரட்டை வேஷம் ?
உடனே , பார்த்தீர்களா !! இந்திய அரசு 2023 இல் செய்ததை தமிழகம் 1973 லேயே செய்து விட்டது என்று மார் தட்டிக் கொள்வார்கள் !!
அப்படி அவர்கள் வசதிக்கு வரலாற்றை எழுதுபவர்களுக்கு ஒரு நினைவூட்டல்…. 1952 ஆம் ஆண்டிலேயே சிக்கிம் மாநிலத்தில் இது உருவாகி விட்டது !!
மாநிலங்கள் அளவில் இருந்த இந்த திட்டங்களை, 60 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தேசிய அளவில் பெருமையாக எடுத்து செல்ல தவறி விட்டது !
இன்று பாஜக பாரம்பரிய கலைஞர்களுக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கொடுப்பதை பொறுக்க முடியாமல் , பாரம்பரியத்தை அழிக்கத் துடிக்கும் இயக்கங்கள் எல்லாம் வரிந்துக் கட்டிக் கொண்டு பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன !!!
குறிப்பாக இலவசம் கொடுத்து விட்டு ஓசி என்று சொல்லிக் காட்டாமல், குறைந்த வட்டியில் கடன் கொடுத்து அவர்களை சுயமான தொழில் முனைவோராக மாற்றுவது இவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி இருக்கலாம் !!
ஆனால் பாரம்பரிய கலைஞர்களும் தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்று நினைக்கிறது பாஜக அரசு !!
அவர்களது பாரம்பரியத்தை அழித்து தெருவிலே நிற்க வைக்க வேண்டும் என விரும்புகிறது திராவிட மாடல், எனக் குறிப்பிட்டுள்ளார்.