கடந்த 23.08.2023 புதன் கிழமை மாலை மாம்பலம் பாணிக்ரஹா திருமண மண்டபத்தில் திரு முகிலன் கிருஷ்ணமூர்த்தி அவர்களது மகள் டாக்டர். முகில் மதி – பிரவீன் குமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. அன்று மாலை மிகச் சரியாக ஆறு மணி நான்கு நிமிடத்திற்கு சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியதைத் தொடர்ந்து தம்பதியர் மண்டபத்திற்கு வெளியில் வந்து தேசியக் கொடியை ஏந்தியபடி பாரத் மாதா கி ஜெய் என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து 5000 வாலா சரவெடி வெடிக்கப்பட்டது.
சந்திரயான் வெற்றியை மணமக்கள் கோலாகலமாகக் கொண்டாடியதை அப்பகுதி மக்கள் வெகுவாக ரசித்தனர்.